முகப்பு /புதுச்சேரி /

டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட சிறுமி.. அரிய வகை ரத்தம் வழங்கி உதவிய புதுவை எம்.எல்.ஏ.!

டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட சிறுமி.. அரிய வகை ரத்தம் வழங்கி உதவிய புதுவை எம்.எல்.ஏ.!

ரத்தம் கொடுத்து உதவிய எம்.எல்.ஏ.

ரத்தம் கொடுத்து உதவிய எம்.எல்.ஏ.

Puducherry MLA blood donate | சிறுமிக்கு ரத்தத்தில் வெள்ளை அணுக்கள் குறைய தொடங்கியுள்ளதால் சிறுமி அபாய கட்டத்தை நெருங்க தொடங்கினார்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Puducherry (Pondicherry) | Puducherry (Pondicherry)

புதுச்சேரியில் டெங்குவால் பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் சிறுமிக்கு ரத்தம் வழங்கி உதவிய புதுவை எம்.எல்.ஏவுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

புதுவை அரும்பாத்தபுரத்தைச் சேர்ந்த ராஜேந்திரன் 7 வயது மகள் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு புதுவை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.இவருக்கு திடீரென உடல் நலம் கடுமையாக பாதிக்கப்பட்டது.

சிறுமிக்கு ரத்தத்தில் வெள்ளை அணுக்கள் குறைய தொடங்கியுள்ளதும் சிறுமிக்கு அரிய வகை ஓ நெகட்டிவ் வகை ரத்தம் தேவைப்பட்டது. பல இடங்களில் சிறுமியின் தந்தை ராஜேந்திரன் முயற்சியிலும் ரத்தம் கிடைக்கவில்லை.

இந்நிலையில் அரசு மருத்துவமனையில் ரத்தம் நன்கொடையாளர் பட்டியலில் உள்ள எண்ணில் சட்டமன்ற உறுப்பினர் சம்பத் தொலைபேசி எண் இருந்துள்ளது. உடனே ராஜேந்திரன் சட்டமன்ற உறுப்பினர் சம்பத்தை தொடர்பு கொண்டு ரத்ததானம் செய்ய கோரிக்கை விடுத்துள்ளார்.

இவரின் கோரிக்கையை ஏற்று அரசு மருத்துவமனைக்கு சென்று சட்டமன்ற உறுப்பினர் சம்பத் ரத்ததானம் செய்தார். தொலைபேசியில் தொடர்பு கொண்ட உடனே சட்டமன்ற உறுப்பினர் குழந்தைக்கு ரத்ததானம் செய்ய வந்த சம்பவம் பெற்றோர் மற்றும் உறவினர்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

First published:

Tags: Blood Donation, MLA, Puducherry