முகப்பு /செய்தி /புதுச்சேரி / துப்புரவு பணியாளர்களுக்கு ஸ்டார் ஹோட்டலில் ட்ரீட்.. புதுச்சேரி எம்.எல்.ஏ-வுக்கு குவியும் பாராட்டு!

துப்புரவு பணியாளர்களுக்கு ஸ்டார் ஹோட்டலில் ட்ரீட்.. புதுச்சேரி எம்.எல்.ஏ-வுக்கு குவியும் பாராட்டு!

துப்புரவு பணியாளர்களுக்கு உணவு வழங்கிய எம்.எல்.ஏ.

துப்புரவு பணியாளர்களுக்கு உணவு வழங்கிய எம்.எல்.ஏ.

Puducherry | புதுச்சேரியில் பிறந்த நாளன்று துப்புரவு பணியாளர்களுக்கு நட்சத்திர ஓட்டலில் முதல் தர உணவு விருந்து வழங்கிய திமுக சட்டமன்ற உறுப்பினர்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Puducherry (Pondicherry), India

புதுச்சேரியில் தனது பிறந்த நாளில் துப்புரவு பணியாளர்களுக்கு நட்சத்திர ஓட்டலில் முதல் தர உணவு விருந்து வழங்கிய திமுக சட்டமன்ற உறுப்பினருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

புதுச்சேரி முதலியார்பேட்டையின் சட்டமன்ற உறுப்பினர் சம்பத். இவருக்கு நேற்று பிறந்த நாள் கொண்டாடப்பட்டது. இதனால், இவருக்கு சட்டமன்றத்தில் சபாநாயகர் முதல் அதிகாரிகள் அனைவரும் வாழ்த்து தெரிவித்தனர். சட்டசபை நிகழ்வை முடித்துக் கொண்ட இவர் நேராக கடலூர் சாலையில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றுக்கு சென்றார். அங்கு  127 துப்புரவாளர்களுக்கு மதிய விருந்து அளித்தார்.  வசதி படைத்தவர்களுக்கு எந்த வகையில் உணவு வழங்கப்படுமோ, அதே மரியாதையுடன் உணவு வழங்க வேண்டும் என ஹோட்டல் நிர்வாகத்தை  கேட்டுக் கொண்டார்.

இதற்கான முழு செலவையும் ஏற்று கொண்ட எம்எல்ஏ, துப்புரவாளர்களை பலரும் மதிப்பதில்லை, கொரோனா காலத்தில் அவர்களது பணியை அளப்பரியாது. அவர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில் இந்த மதிய உணவை அணித்திருப்பது மன திருப்தியாக உள்ளது என தெரிவித்தார்.

தங்களது பிள்ளைகள் கூட இது போன்ற ஹோட்டலுக்கு அழைத்து வரவில்லை. பிறந்த நாளன்று எம்.எல்.ஏ மதிய உணவு அளித்தது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த ஓட்டலில் வெளியில் இருந்து தான் பார்த்துள்ளோம். பெற்றோர் கூட இந்த ஹோட்டலுக்கு அழைத்து வந்ததில்லை என துப்புரவு பணியாளர்கள் மகிழ்ச்சி தெரிவிக்கின்றனர்.

First published:

Tags: Birthday, MLA, Puducherry