முகப்பு /புதுச்சேரி /

அமைச்சர் சந்திர பிரியங்காவுடன் செல்பி எடுக்க அலைமோதிய புதுவை பெண்கள்.!

அமைச்சர் சந்திர பிரியங்காவுடன் செல்பி எடுக்க அலைமோதிய புதுவை பெண்கள்.!

X
அமைச்சர்

அமைச்சர் சந்திர பிரியங்காவுடன் செல்பி எடுத்த பெண்கள்

Puducherry News | புதுச்சேரியில் பாஜக மகளிர் அணி சார்பாக நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்ட அமைச்சருடன் பொதுமக்கள் முண்டியடித்து கொண்டு செல்பி எடுத்தனர்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Puducherry (Pondicherry), India

புதுச்சேரி ஆம்பூர் சாலையில் உள்ள மைதானத்தில் பாஜக மகளிர் அணி சார்பாக மத்திய அரசின் நலத்திட்டங்கள் குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்திற்கு சிறப்பு விருந்தினராக போக்குவரத்து துறை அமைச்சர் சந்திர பிரியங்கா கலந்துகொண்டு மத்திய, மாநில அரசுகளின் திட்டங்கள் குறித்து எடுத்துரைத்தார்.

தொடர்ந்து கூட்டம் நிறைவு பெற்றபின் அமைச்சர் சந்திர பிரியங்காவுடன் செல்பி எடுக்க பெண்கள் போட்டி போட்டுக்கொண்டு அலை மோதினர். அப்போது அமைச்சர் சிலரிடம் அலைபேசியை வாங்கி அவர்களுடன் செல்பி எடுத்து கொண்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

நடிகர்களுடன் செல்பி எடுத்துக்கொள்வது போல் புதுவையில் அமைச்சருடன் போட்டி போட்டுக் கொண்டு மக்கள் கூட்டமாக செல்பி எடுத்தது பார்ப்பவர்களை ஆச்சரியப்படுத்தியது.

First published:

Tags: Local News, Minister, Puducherry, Selfie