முகப்பு /புதுச்சேரி /

12 ஆண்டுகளுக்கு ஒருமுறை விளையும் பூமி சக்கரவள்ளி கிழங்கு.. இதன் மகத்துவத்தை எடுத்துரைக்கும் புதுவை வியாபாரி..

12 ஆண்டுகளுக்கு ஒருமுறை விளையும் பூமி சக்கரவள்ளி கிழங்கு.. இதன் மகத்துவத்தை எடுத்துரைக்கும் புதுவை வியாபாரி..

X
பூமி

பூமி சக்கரவள்ளி கிழங்கு

Puducherry News : 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை விளையும் பூமி சக்கரவள்ளி கிழங்கின் மருத்து குணங்களை விளக்கும் புதுச்சேரி வியாபாரி.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Puducherry (Pondicherry), India

விழுப்புரத்தை சேர்ந்தவர் இளவரசன். விவசாய குடும்பத்தை சேர்ந்த இவர் இவரது பாட்டனார் காலத்தில் இருந்து சுமார் 40 ஆண்டுகளுக்கும் மேலாக பூமி சக்கர வள்ளி கிழங்கு விற்பனை செய்யும் வியாபாரத்தை செய்து வருகின்றனர். புதுச்சேரி புஸ்சி வீதி - காந்திவீதி சந்திப்பில் தள்ளு வண்டியில் பூமி சக்கரவல்லி கிழங்கு கடை நடத்தி வருகிறார். இக்கிழங்கு மலைப் பிரதேசத்தில் தான் விளையும். ஒரு கிழங்கு முழுசா வளரவே 12 ஆண்டுகளுக்கு மேல் ஆகும். மேலும் கர்நாடகா, ஆந்திரா மற்றும் கொல்லிமலை உள்ளிட்ட மலை பிரதேசங்களில் இந்த பூமி சர்க்கரைவள்ளி கிழங்கு அதிக அளவில் விளைகிறது.

பகுதியில் இருந்து வனத்துறையிடம் வாங்கி வந்து விற்பனை செய்யப்படுகிறது. வனத்துறையிடம் ஒரு கிலோ 1000 ரூபாய் மேல் வாங்குகின்றனர். இங்கு பொதுமக்களிடம் ஒரு செட் 60 ரூபாய்க்கும், அறை செட் 30 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. பூமி சக்கரவல்லி கிழங்கு குறித்து இளவரசன் கூறும்போது, “பூமி சக்கரவல்லி கிழங்கு என்பது இயற்கையாகவே மருத்துவ குணம் கொண்டது. நமது முன்னோர்கள் செயற்கை மருத்துவம் செல்லாமல் பூமி சக்கரவள்ளி கிழங்கு சாப்பிட்டு உயிர் வாழ்ந்த வரலாறு எல்லாம் உண்டு. அப்படி சிறப்பு மிக்க அந்த கிழங்கு தற்போது புதுச்சேரியில் விற்பனை செய்து வருகிறேன். இந்த கிழங்கை சாப்பிட்டால் உடல் சூடு, பித்தம், மூலம், வயிற்றுப்புண், முதுகு வலி உள்ளிட்ட பல்வேறு நோய்கள் குணமடைய செய்கிறது” என்று தெரிவித்தார்.

First published:

Tags: Local News, Puducherry