புதுச்சேரியை சேர்ந்தவர் அபிலாஷ். இவர் நெதர்லாந்து நாட்டில் பணி செய்து வருகிறார். இவருக்கும் அதே இடத்தில் பணிபுரியும் அல்ஜீரியா நாட்டைச் சேர்ந்த பாத்திமா அப்பி என்ற இஸ்லாமிய பெண்ணுக்கும் நட்பு ஏற்பட்டது. இந்த நட்பு நாளடைவில் காதலாக மாறியது.
இருவரும் ஒருவரையொருவர் புரிந்துகொண்டு 2015 ஆம் ஆண்டு முதல் காதலித்து வந்தனர். அபிலேஷின் தந்தை இந்து, தாய் கிறிஸ்துவர். காதலிக்கும் பெண் இஸ்மியர். இதனால் இரு விட்டார் சம்மதத்துடன் சமயம், சாதி, மதம், இனம், மொழி இவற்றைக் கடந்து இறைவன் ஒருவனே என்ற அடிப்படையில் அன்பினை மட்டுமே மையப்படுத்தி வள்ளலார் உருவாக்கிய சன்மார்க்க நெறிப்படி திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர்.
இதன்படி இந்தியா வந்த இவர்கள், சன்மார்க்க சங்கத்தினர் மற்றும் பெரியோர்கள் முன்னிலையில் புதுச்சேரி தட்டாஞ்சாவடி சமரச சத்திய சாதனை சங்கம் எனப்படும் வள்ளலார் அவையில் உலகப் பொதுமறை திருக்குறளின் மீதும் அருட்பெருஞ்சோதி வள்ளலாரின் திருமுறையின் மீதும் உறுதியேற்று வள்ளலார் முறைப்படி திருமணம் செய்து கொண்டனர்.
இந்த திருமணத்தில் சன்மார்க்கிகள் கலந்து கொண்டு வள்ளலார் எழுதிய திருவருட்பாவின் ஆறாம் திருமுறை பாடலை சுமார் இரண்டரை மணி நேரம் அகவல் பாராயணம் செய்து திருமணத்தை நடத்தி வைத்தனர். இதில் இந்து, முஸ்லிம், கிறிஸ்தவ முறை என எதுவும் இல்லாமல் சன்மார்க்க முறைப்படி மாங்கல்யத்துக்கு பதிலாக தங்கச் சங்கிலியை கழுத்தில் அணிந்து மாலை மாற்றி திருமணம் செய்து கொண்டனர்.
இந்த திருமணம் குறித்து மணமகள் அபிலேஷ் கூறுகையில், ’தனது தாய் கிறிஸ்துவர், தந்தை இந்து, மனைவி இஸ்லாமியர். அதனால் எல்லோருக்கும் பொதுவாக ஆன்மீகத்தோடு ஈடுபாடு உள்ள ஒரு முறையில் திருமணம் செய்து கொள்ள விரும்பினோம். அதன் அடிப்படையில் வள்ளலாரின் வழி சிறந்ததாக தெரிந்தது. அதன் வழியில் திருமணம் செய்து கொண்டுள்ளோம் என்றார்.
மேலும் எங்களுடைய மத கொண்டாட்டங்கள் எந்த தடையும் இன்றி சிறப்பாக நடக்கும். சிறுவயதில் இருந்து அவர் (மணபெண்) ரமலான் நோன்பு என்று பழகியவர்கள். நான் கோயிலுக்கும் சர்ச்சுக்கும் செல்வேன். இனி கிறிஸ்துமஸ் என்றால் இல்லாதவர்களுக்கு கேக் கொடுப்பதை நிறுத்த போவதில்லை.
புதிய நாடாளுமன்றக் கட்டிடம் திறக்கும் நாள் துக்க நாளாக அனுசரிப்பு- திருமாவளவன் அறிவிப்பு
மேலும் நாங்கள் இருவரும் மொரோக்கோவில் படிக்கும்போது பழக்கம் ஏற்பட்டது. எங்கள் இருவருக்கும் ஒரே மாதிரியான எண்ணங்களும் ஒரே மாதிரியான சிந்தனைகளும் கொண்டு இருப்பதால் எங்களுக்குள் மதப்பாகுப்பாடு எது வராது என்று நம்பிக்கை உள்ளதாக மணமகள் பாத்திமா அப்பி தெரிவித்தார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Love marriage, Marriage, Puducherry