முகப்பு /செய்தி /புதுச்சேரி / ஆப் மூலம் ஆப்பு வைத்த வாலிபர்... புதுச்சேரியில் தொழிலதிபரிடம் ரூ. 27 லட்சம் மோசடி!

ஆப் மூலம் ஆப்பு வைத்த வாலிபர்... புதுச்சேரியில் தொழிலதிபரிடம் ரூ. 27 லட்சம் மோசடி!

மோசடி நபர் கைது

மோசடி நபர் கைது

Puducherry cheating | முதலீட்டிற்கு பன்மடங்கு லாபம் ஆசை வார்த்தை கூறி ஆன்லைனில் மோசடி செய்துள்ளார்.

  • Last Updated :
  • Puducherry (Pondicherry), India

புதுச்சேரியில் தனி செயலி உருவாக்கி தொழிலதிபரிடம் ரூ.27 லட்சம் மோசடி செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

புதுச்சேரியைச் சேர்ந்த தொழிலதிபர் வெங்கடேச பெருமாள் (44) இணையத்தில் வியாபாரம் தொடர்பாக தகவல்களை தேடி கொண்டிருந்தபோது தனி"Xhelper"என்ற  app மூலம் அவருக்கு அழைப்பு வந்துள்ளது. அதில் நாங்கள் சொல்லும் You tube Linkயை பார்த்து Like செய்தால் பணம் கிடைக்கும் என ஆசை வார்த்தை கூறியுள்ளனர். தொடர்ந்து அவருக்கு அடுத்தடுத்து Taskகளை கொடுத்து அவரது ஆசையை தூண்டியுள்ளனர்.

அவரது கணக்கில் சில ஆயிரம் ரூபாய் இருப்பது போல் காட்டி விட்டு எங்களிடம் முதலீடு செய்தால் பல மடங்கு பணம் பெருகும் என கூறியுள்ளனர். இதனை நம்பி அவர் படிப்படியாக 27.50 லட்சம் ரூபாய் வரை முதலீடு செய்துள்ளார். அதன் பிறகு அவர்களது இணைய தொடர்பு துண்டிக்கப்பட்டது. இதனால் ஏமாற்றமடைந்ததை அறிந்த வெங்கடேச பெருமாள் சைபர் கிரைம் காவல் நிலையம்  புகார் அளித்தார். அதில் முகம் தெரியாத நபர் மர்ம நபர் இணைய வழியே அதிக வருமானத்தைப் பெறும் திட்டம் என  அறிமுகப்படுத்தி ஏமாற்றியதாக தெரிவித்தார்.புகாரின்அடிப்படையில், சைபர் கிரைம் போலீசார் மோசடி வழக்கு பதிவுசெய்யப்பட்டு விசாரணை செய்தனர்.

இந்த வழக்கின் சம்பந்தப்பட்ட குற்றவாளியை பிடிப்பதற்காக சைபர் கிரைம் முதுநிலை காவல் கண்காணிப்பாளர் நாரா.சைத்தன்யா உத்தரவின் பேரில், காவல் கண்காணிப்பாளர் விஷ்னு குமார், மேற்பார்வையில் இணையவழி குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர்கள் கார்த்திகேயன் , கீர்த்தி தலைமையில் தனிப்படை குழு விசாரித்தது. தொழிலதிபர் அனுப்பிய பணம் 50 வங்கி கணக்குகளுக்கு சென்றது. இவற்றை பொறுமையாக விசாரித்தில் ஒரு கணக்கு மட்டும் சிக்கியது.

இதையும் படிங்க : ஏசி, ஏர் கூலர் இல்லாமலே உங்கள் வீட்டை குளுர்ச்சியா வச்சுக்கனுமா..? தினமும் இரவு டிப்ஸ் ஃபாலோ பண்ணுங்க..!

அது கேரள மாநிலம் திருச்சூரில் உள்ள ஒரு வங்கியில் காட்டியது. உடனே போலீசார் திருச்சூர் விரைந்தனர். அந்த வங்கி கணக்கில் கொடுத்த செல்போன் எண் அடிப்படையில் கொச்சின் எடப்பள்ளி வடக்கில் உள்ள குடியிருப்பு முன்பு  திருச்சூரை சேர்ந்த  நாசர்(35) என்பவரை மடக்கி பிடித்தனர். அப்போது அவரிடம் மோசடி செய்த பணத்தில் வாங்கிய சொகுசு கார், 34 ஏடிஎம் கார்டுகள், 22 பேங்க் passbooks, 40 cheque books, 10 செல்போன், லேப்டாப், 7 லட்சம் ரூபாய் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டன.

விசாரணையின் போது, குற்றம் சாட்டப்பட்ட நபர்,"Xhelper" எனப்படும் ஒரு செயலியை வடிவமைத்ததாகவும், அதன் பரிவர்த்தனைகளும் அணுகல் செய்யப்பட்டதாகவும், தொலைதூர மூலம் முழு தகவல் தொடர்புகளும் தெரியவந்துள்ளது.

கருவியின் உதவியுடன், ஒரு தொலைதூர இடத்திலிருந்து மற்றொரு இடத்திலிருந்து OTPகளை அணுகுவதன் மூலம் நிதி பரிவர்த்தனைகள் செய்யப்படும்.

இதனால் சட்ட அமலாக்க முகவர் சந்தேக நபரின்இருப்பிடத்தை யூகிக்க சிரமங்களை உருவாக்கி அப்பாவி மக்களை ஏமாற்றி ஆன்லைன் பணியில் பெரிய வருமானம் சம்பாதிக்க பணத்தை டெபாசிட் செய்ய தூண்டுவர் என சைபர் கிரைம் போலீசார் எச்சரித்தனர். அடிப்படையில் புகைப்பட கலைஞராக இருந்த குற்றவாளி நாசர், பகுதிநேர வேலைக்காக இணையத்தில் தேடிய போது இணைய மோசடி கும்பலுடன் தொடர்பானார். அவர்களது Networkல் இருக்கும் நாசர் புதுச்சேரி மட்டுமல்லாது இந்தியா முழுவதும் பல மோசடிகளை தங்களது குழு செய்து வருவதாக தெரிவித்துள்ளார்.இந்தியாவில் முதல்முறையாக இணைய மோசடி குழுவில் ஒருவர் சிக்கியுள்ளார்.

top videos

    Networkயை பிடித்தால் மட்டுமே இந்த குற்றத்தை குறைக்க முடியும். அதே போல் உழைக்காமல் பணம் கிடைக்காது என மக்கள் உணர வேண்டும் என சைபர் கிரைம் போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.

    First published:

    Tags: Apps, Cheating case, Online Frauds, Puducherry