முகப்பு /புதுச்சேரி /

புதுவையில் ஆடிப்பாடி விமரிசையாக கொண்டாடப்பட்ட மகாவீர் ஜெயந்தி!

புதுவையில் ஆடிப்பாடி விமரிசையாக கொண்டாடப்பட்ட மகாவீர் ஜெயந்தி!

X
மகாவீர்

மகாவீர் ஜெயந்தி ஊர்வலம்

Puducherry News | புதுச்சேரி 45 அடி சாலையில் உள்ள ஜெயின் கோவிலில் மகாவீர் ஜெயந்தி விழாவை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது.

  • Last Updated :
  • Puducherry (Pondicherry), India

மகாவீர் ஜெயந்தி விழா நாடு முழுவதும் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது.

புதுச்சேரியில் உள்ள ஜெயின் சமூகத்தைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்டோர் அண்ணா சாலையில் உள்ள ஜெயின் கோயிலில் ஒன்று கூடினர். கோயிலில் மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு முதல் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது. இதில் மகாவீரர் சிலையுடன் தேர் பவனியும் நடைபெற்றது. இந்த ஊர்வலத்தில் புதுச்சேரியில் வாழும் ஜெயின் சமூகத்தைச் சேர்ந்த சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க | பங்குனி உத்திரம்: புதுச்சேரியில் அவதாருடன் அவதரித்த முருகனை வியந்து பார்த்த பக்தர்கள்..!

அண்ணா சாலையில் தொடங்கிய பேரணி, முக்கிய வீதிகள் வழியாக சென்றது. தேர் பவனியை தொடர்ந்து பஜனை பாடல்களை பாடிய படியும் பல்வேறு வாத்தியங்களை இசைத்தபடியும் ஜெயின் சமூகத்தினர் ஊர்வலமாக சென்றனர்.

அப்போது ஜெயின் சமூகத்தினர் பாடல்களை பாடியும் நடனமாடியபடியும் சென்றனர். மேலும் மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு புதுவையில் மதுபானக் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.

First published:

Tags: Local News, Mahaveer Jayanthi, Puducherry