முகப்பு /புதுச்சேரி /

புதுவையில் மகா சிவராத்திரி மற்றும் சனி பிரதோஷத்தை ஒட்டி சிவன் கோயில்களில் சிறப்பு பூஜை!

புதுவையில் மகா சிவராத்திரி மற்றும் சனி பிரதோஷத்தை ஒட்டி சிவன் கோயில்களில் சிறப்பு பூஜை!

X
சிவன்

சிவன் கோயில்களில் களைகட்டிய பூஜை

puducherry maha shivaratri | புதுவையில் மகா சிவராத்திரி மற்றும் சனி பிரதோஷத்தை ஒட்டி சிவன் கோயில்களில் சிறப்பு பூஜையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர் 

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Puducherry (Pondicherry) | Puducherry (Pondicherry)

சிவபெருமான் தேவர+களை காப்பாற்ற ஆலகால நஞ்சை உண்ட நாள் சனிக்கிழமை. எனவே மற்ற பிரதோஷ நாட்களை காட்டிலும் சனிப்பிரதோஷம் மிகவும் விசேஷமாக கருதப்படுகிறது.

அதுமட்டுமல்லாமல் இந்த ஆண்டு சனி பிரதோஷம் மற்றும் மகா சிவராத்திரி இரண்டுமே ஒரு சேர வந்துள்ளது கூடுதல் சிறப்பாக கருதப்படுகிறது.இதையொட்டி புதுச்சேரியில் உள்ள சிவன் கோயில்களில் சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடைபெற்றது.

அதன் ஒரு பகுதியாக புதுவையில் பிரசித்தி பெற்ற வேதபுரீஸ்வரர் ஆலயத்தில் நந்தி பகவானுக்கு பால், தயிர், திருமஞ்சனம், தேன், இளநீர் உள்பட பல்வேறு திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

தொடர்ந்து மலர் மாலைகள் அணிவிக்கப்பட்டு சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டன. இதையடுத்து கோவில் வளாகத்தில் சுவாமி திருவீதி உலா வரும் நிகழ்ச்சி நடந்தது. இதில் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

First published:

Tags: Local News, Maha Shivaratri, Puducherry