முகப்பு /புதுச்சேரி /

விலை ரூ.550.. காதலர் தினத்தால் எகிறிய ரோஜாக்களின் ரேட்.. ஷாக்கான காதலர்கள்!

விலை ரூ.550.. காதலர் தினத்தால் எகிறிய ரோஜாக்களின் ரேட்.. ஷாக்கான காதலர்கள்!

X
ரோஜா

ரோஜா விலை

Puducherry | தன் துணையை தேர்ந்தெடுக்கவும், காதலை வெளிப்படுத்தவும் ரோஜா வாங்க சென்ற காதலர்களுக்கு ரோஜாவின் விலை அதிர்ச்சியை அளித்துள்ளது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Puducherry (Pondicherry) | Puducherry

காதலர் தினத்தன்று காதலர்கள் தங்களது காதலை வெளிபடுத்த ரோஜாப்பூக்களை அளிப்பது வழக்கமான ஒன்றுதான். இதனால் ரோஜா பூக்களின் விலை எகிறியுள்ளது.

காதலர்களுக்கு ஷாக் கொடுக்கும் விதமாக தமிழகத்தில் பல்வேறு பூக்கள் சந்தையில் ரோஜா பூக்களில் விலை 4 மடங்காக அதிகரித்துள்ளது. குறிப்பாக கன்னியாகுமரி தோவாளை மலர் சந்தையில் ரோஜாக்களின் ஒரு கட்டு ரூ.150-இல் இருந்து ரூ.550 வரை விற்பனை செய்யப்படுகிறது. அதே போல் ஒரு ரோஜா பூவின் விலை ரூ.10-இல் இருந்து ரூ.35 வரை விற்பனை செய்யப்படுகிறது. புதுச்சேரியிலும் இதே விலை தொடர்ந்து வருகிறது.

இதனை கேட்ட காதலர்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். ஆனாலும், வேறு வழியின்றி காதலர்களுக்கு ரோஜா பூக்களை கொடுக்க வேண்டும் என ஆர்வமாக வாங்கி செல்கின்றனர்.

First published:

Tags: Local News, Puducherry, Rose, Valentine's day