கடற்கரை சுற்றுலா நகரமான புதுச்சேரி வம்பாகீரப்பாளையத்தில் அமைந்துள்ள கலங்கரை விளக்கம் கம்பீரமாக அழகு மிகுந்ததாக காட்சியளிக்கிறது. இந்த கலங்கரை விளக்கத்தில் ஏறி கடற்கரைகளையும், புதுச்சேரி நகரின் அழகையும் கண்டு ரசித்து வந்தனர். இதனிடையே, கொரோனா தொற்று காலத்திற்கு முன்பாகவே கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு பொதுமக்கள் பார்வைக்கு தடைசெய்யப்பட்டது.
இந்நிலையில், இதை மீண்டும் திறக்கப்பட வேண்டும் என பொதுமக்கள் தொடர்ந்து அரசுக்கு கோரிக்கை வைத்து வந்தனர்.
அதன்படி மத்திய அரசின் நிர்வாகத்தின் கீழ் உள்ள கப்பல் மற்றும் நீர் வழி போக்குவரத்து துறையின் ஒரு பிரிவான கலங்கரை விளக்கங்கள் இயக்க துறையின் சென்னையில் உள்ள துணை இயக்குனர் ஜெனரலின் உத்தரவின்பேரில் கலங்கரை விளக்கத்தின் உட்புறப்பகுதிகள் புணரமைக்கப்பட்டு பாதுகாப்பு அம்சங்கள் உறுது செய்த பின்பு இன்று பொதுமக்கள் பார்வைக்காக திறக்கப்பட்டது.
இதையடுத்து, பார்வையாளர்கள் பிற்பகல் 2 மணி முதல் மாலை 5 மணி வரை அனுமதிக்கப்பட்டனர். 3 முதல் 12 வயது வரை குழந்தைகளுக்கு ரூ.5ம், பெரியோருக்கு ரூ.10ம், புகைப்பட கருவிக்கு ரூ.25ம், வெளிநாட்டவருக்கு ரூ.25ம் என கட்டணம் வசூலிக்கப்படுகிறது. வாரந்தோறும் திங்கள் கிழமை விடுமுறை விடப்படுகிறது. கலங்கரை விளக்கம் பார்வைக்காக திறக்கப்பட்ட தகவல் அறிந்த ஏராளமான பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் கலங்கரை விளக்கத்தின் மேல் ஏறி கடற்கரை சுற்றுலா நகரமான புதுச்சேரியின் அழகை கண்டு ரசித்தனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Puducherry