முகப்பு /புதுச்சேரி /

புதுவை கதிர்காமம் முத்துமாரியம்மன் கோவிலில் செடல் உற்சவம்.. பக்தர்கள் பரவசம்!

புதுவை கதிர்காமம் முத்துமாரியம்மன் கோவிலில் செடல் உற்சவம்.. பக்தர்கள் பரவசம்!

X
செடல்

செடல் உற்சவம்

Kathirkamam Muthumariamman Temple | கதிர்காமம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான முத்திரப்பாளையம், தட்டாஞ்சாவடி, இந்திரா நகர், கோரிமேடு ஆகிய பகுதிகளை சேர்ந்த 37 அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு நேற்று உள்ளூர்  விடுமுறை அளிக்கப்பட்டது.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Puducherry (Pondicherry) | Puducherry (Pondicherry)

புதுச்சேரி கதிர்காமம் பகுதியில் அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவில் உள்ளது.இக்கோவிலின் செடல் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது.

செடல் உற்சவத்தை முன்னிட்டு அலங்கரிக்கப்பட்ட மூலவர் அம்மனை துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன், முதல்வர் ரங்கசாமி உள்ளிட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் தரிசனம் செய்தனர் மேலும் உடலில் செடல் குத்திக்கொண்டு ஏராளமான பக்தர்கள் தங்களின் வேண்டுதலை நிறைவேற்றினர்.

இதனிடையே கோயில் அமைந்துள்ள கதிர்காமம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான முத்திரப்பாளையம், தட்டாஞ்சாவடி, இந்திரா நகர், கோரிமேடு ஆகிய பகுதிகளை சேர்ந்த 37 அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு நேற்று உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டது.

First published:

Tags: Festival, Local News, Puducherry, Temple