முகப்பு /புதுச்சேரி /

மே 5-ம் தேதி மருத்துவமனைக்கு வரவேண்டாம் : வெளிநோயாளிகளுக்கு புதுச்சேரி ஜிப்மர் நிர்வாகம் அறிவிப்பு

மே 5-ம் தேதி மருத்துவமனைக்கு வரவேண்டாம் : வெளிநோயாளிகளுக்கு புதுச்சேரி ஜிப்மர் நிர்வாகம் அறிவிப்பு

ஜிப்மர் மருத்துவமனை

ஜிப்மர் மருத்துவமனை

புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் மே 5-ம் தேதி அவசர மருத்துவ சேவைகள் அனைத்தும் வழக்கம்போல் இயங்கும் என மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

  • Last Updated :
  • Puducherry (Pondicherry), India

புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் மே 5-ம் தேதி வெளிப்புற நோயாளிகள் பிரிவு இயங்காது என மருத்துவமனை நிர்வாகம்  அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

மத்திய அரசின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ளது ஜிப்மர் மருத்துவமனை. இங்கு புதுவை மட்டுமல்லாமல் தமிழகத்தை சேர்ந்தவர்களும் சிகிச்சை பெற்று வருகின்றனர். மருத்துவமனையில் நாள் ஒன்றுக்கு சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

இந்நிலையில் இன்று ஜிப்மர் நிர்வாகம் ஒரு அறிவிப்பு வெளியிட்டது. அதில் மத்திய அரசின் விடுமுறை தினமான 05.05.2023 அன்று புத்த பூர்ணிமாவை முன்னிட்டு ஜிப்மர் வெளிப்புற நோயாளி பிரிவுகள் இயங்காது. எனவே இந்த தேதியில் நோயாளிகள் வருவதை தவிர்க்குமாறு கேட்டுக்கொண்டுள்ளது.

அதே நேரம் அவசர மருத்துவ பிரிவு சேவைகள் அனைத்தும் வழக்கம் போல் இயங்கும் என்றும்,  ஏப்ரல் 6 ஆம் தேதி வெளிப்புற நோயாளிகள் பிரிவுகள் வழக்கம்போல் இயங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

top videos
    First published:

    Tags: Local News, Pondicherry