புதுச்சேரி அடுத்த காட்டேரி குப்பத்தில் இருளர் குடியிருப்பு இருக்கிறது. இங்கு சுமார் 50க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இவர்களுக்கு கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக பொதுக் கழிப்பிடம் இல்லை. திறந்தவெளியை தான் கழிப்பிடமாக பயன்படுத்தி வருகிறார்கள்.
இந்த நிலையில் புதுச்சேரி வட்டார வளர்ச்சித் துறை மூலம் ஒவ்வொரு வீட்டிலும் கழிப்பிட வசதி கட்டித்தர லோன் அனுமதி வந்தது. ரூ. 20 ஆயிரம் மதிப்புள்ள கழிப்பிடம் கட்டித்தர முடிவு எடுக்கப்பட்டு வட்டார வளர்ச்சித் துறை மூலம் டெண்டர் விடப்பட்டது. டெண்டர் எடுத்த ஒப்பந்ததாரர் அவரவர் அனுமதி பெற்றோருக்கு வீட்டில் கழிப்பிடம் கட்டித்தர ஒப்புதல் அளித்தார்.
சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஒப்புதல் பெறப்பட்டு கழிவறை கட்டுவதற்கான பணியில் இறங்கினர். அதன்பிறகு கழிப்பிடம் கட்டவில்லை. திடீரென கழிவறைகள் கட்டும் பணி நிறுத்தப்பட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பகுதி இருளர் இன மக்கள் ஆட்சியர், எம் எல் ஏ ஆகியோரிடம் முறையிட்டும் இதுவரை பொதுக்கழிப்பிடம் கட்டித்தரப்படவில்லை.
இதையும் படிக்க : இளம்பெண்கள் போட்டோக்களை அனுப்பி டெலிகிராமில் வலை.. புதுச்சேரி இளைஞன் கைது
கடந்த சில மாதங்கள் முன்பு மாவட்ட ஆட்சியர் வல்லவன் இந்த பகுதியை நேரில் வந்து பார்வையிட்டார். அதன் பின்னர் இதுகுறித்து அதிகாரிகள் தரப்பில் கேட்டபோது, " டெண்டர் எடுத்த ஒப்பந்ததாரர் ஏமாற்றி விட்டார். அதனால் கழிப்பிடம் கட்டும் பணி நடக்கவில்லை" என தெரிவித்தார்.
இதுகுறித்து இப்பகுதி மக்கள் கூறுகையில், "கழிப்பிடம் கட்ட பொருட்கள் வந்தன. மண் வாங்கி வந்து வைத்தோம். ஆனால் கட்டவில்லை. கழிப்பிடம் இல்லாததால் கடும் அவதியில் இருக்கிறோம். அரசு தரப்பில் சரியான பதிலும் தரவில்லை. எங்களிடம் பணம் தராமல் தாங்களே கட்டித் தருவதாக கூறி தற்போது கட்டாமல் ஏமாற்றிவிட்டனர்.
மேலும் உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற இங்கே கிளிக் செய்யவும்
ஆட்சியர் நடவடிக்கை எடுப்பதாக உறுதி தந்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. காலையில் எழுந்து காலைக் கடன்களை முடிக்கலாம் என்றால் மது அருந்துவோர் புதர் பகுதிகளில் அமர்ந்திருப்பதால் நாங்கள் பெரும் அவதிப்படுகிறோம். சரி இரவில் போகலாம் என்றால் பாம்பு, தேள் தொல்லையும் உள்ளது. பகலில் குடிகாரர் தொல்லையும், இரவில் விஷ ஜந்துகள் தொல்லையும் நாங்கள் செய்வது அறியாது துன்பப்படுகிறோம்” என்று தெரிவித்தனர்.
கழிவறைகள் கேட்டு அலைந்து அலைந்து ஓய்ந்து போன காட்டேரிக்குப்பம் இருளர் இன மக்கள் பொது கழிப்பிடமாவது கட்டித்தாருங்கள் என கண்ணீர் மல்க அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். 50 ஆண்டு காலமாக கழிப்பிடம் இல்லாமல் அவதிப்படும் இந்த மக்களுக்கு விடிவு காலம் கிடைக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Irular, Local News, Puducherry, Toilet