முகப்பு /புதுச்சேரி /

சம்பளத்தின் ஒரு பகுதியை பறவைகளுக்கு ஓதுக்கும் புதுவை இன்ஸ்பெக்டர்..

சம்பளத்தின் ஒரு பகுதியை பறவைகளுக்கு ஓதுக்கும் புதுவை இன்ஸ்பெக்டர்..

X
சம்பளத்தின்

சம்பளத்தின் ஒரு பகுதியை பறவைகளுக்கு ஓதுக்கும் புதுவை இன்ஸ்பெக்டர்

Puducherry News | புதுவையில் தான் வாங்கும் சம்பளத்தில் ஒரு பகுதியை பறவைகள் பசியாற செலவிட்டு வருகிறார் சைபர் கிரைம் ஆய்வாளர் கீர்த்தி.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Puducherry (Pondicherry), India

புதுச்சேரி சைபர் கிரைம் துறையில் வேலை பார்த்து வருகிறார் ஆய்வாளர் கீர்த்தி. கொரோனா காலங்களில் பொதுமக்களுக்கு தேவையான உதவிகளை செய்தல், மரம் நடுதல், கழிநீர் வாய்க்கால் சுத்தப்படுத்தி கொடுத்தல், பள்ளி மாணவ, மாணவிகளுக்கு நிதி உதவி செய்தல் உள்ளிட்ட பல்வேறு சமூக பணிகளை இவர் செய்து வருகிறார். இதற்காகவே இவர் தாம் வாங்கும் சம்பளத்தில் ஒரு பெரும் தொகையை சமூகப் பணிகளுக்காகவே ஒதுக்கி பல்வேறு சேவைகளை செய்து வருகிறார்.

மேலும் இவரது வீட்டு மாடியில் தினமும் நூற்றுக்கும் மேற்பட்ட காகங்கள், புறாக்கள், கிளிகள் வந்து செல்வது வழக்கம், அவைகளுக்கு தினமும் ரூ,500 வீதம் செலவழித்து அவைகளுக்கு தானியங்கள் உள்ளிட்டவைகளை வாங்கி அவைகளை பசியாற வைத்து வருகிறார். ஆய்வாளர் கீர்த்தி வேலை நேரம் போக வீட்டில் உள்ள நேரத்தில் பறவைகளுடனே இவர் பொழுதுபோக்கி வருகிறார்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

இவர் இல்லாத நேரத்தில் இவரது வீட்டில் உள்ளவர்கள் காகம் கிளிகள், புறா உள்ளிட்ட பறவைகளுக்கு உணவை அளித்து வருகிறார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. தாயுள்ளத்தோடு பறவைகளுக்கு உணவளிக்கும் ஆய்வாளர் செயலுக்கு பல்வேறு தரப்பினை பாராட்டுக்கள் தெரிவித்து வருகின்றனர்.

First published:

Tags: Local News, Puducherry