முகப்பு /செய்தி /புதுச்சேரி / விஜய் பாடலுக்கு நடனமாடி தமிழிசையை வரவேற்ற மாணவிகள்... வைரலாகும் வீடியோ!

விஜய் பாடலுக்கு நடனமாடி தமிழிசையை வரவேற்ற மாணவிகள்... வைரலாகும் வீடியோ!

தமிழிசை சவுந்திரராஜன்

தமிழிசை சவுந்திரராஜன்

Tamilisai soundararajan | அதிகமாக பெண்கள் அரசியலுக்கு வர வேண்டும். படித்த பெண்கள் அரசியலுக்கு வர வர அரசியல் தூய்மையாகும் - தமிழிசை.

  • Last Updated :
  • Puducherry, India

புதுச்சேரி அருகே கல்லூரி ஆண்டு விழாவில் பங்கேற்ற ஆளுநர் தமிழிசையை ஏராளமான மாணவர்கள் பாரம்பரிய உடையில் கண்ணாடியுடன் குத்தாட்டம் போட்டு உற்சாகமாக வரவேற்றனர்.

புதுச்சேரியில் பாக்குமுடையான்பேட்டில் உள்ள இதயா கல்லூரியின் ஆண்டு விழா நேற்று மாலை நடந்தது. விழாவில் துணைநிலை ஆளுநர் தமிழிசை, முதல்வர் ரங்கசாமி ஆகியோர் சிறப்பு விருந்தினராக பங்கேற்றனர். அவர்களை மேடைக்கு அழைத்து வந்த மாணவிகள் பட்டு புடவை, அலங்கார நகை அணிந்து கறுப்பு கூலிங் கிளாஸ் அணிந்து சினிமா பாடல்களுக்கு நடனமாடி உற்சாகமாக அழைத்து வந்தனர்.

விஜய் படத்தின் "வாத்தி Coming" மற்றும் "கோடம்பாக்கம் ஏரியா"

ரஜினிகாந்த்தின் "மாஸ் மரணம்" மலையாள மொழியின் "ஜிமிக்கி கம்மல்" ஆகிய பாடல்களுக்கு மாணவிகள் ஆடி வரவேற்றனர்.  தொடர்ந்து கல்லூரி மாணவி ரெகனா என்பவர் ஆளுநர், தமிழிசை ஓவியத்தை தலைகீழாக வரைந்து அசத்தினார். இதனை ஓவியத்தை பெற்று கொண்ட ஆளுநரும் முதல்வரும் மாணவியை மகிழ்ந்து பாராட்டினார்கள்.

இதையடுத்து மேடையில் பேசிய ஆளுநர் தமிழிசை, தடைகளை தாண்டி பெண்கள் முன்னேறி வரவேண்டும். என்னை போன்றவர்கள் மேடையில் இருக்கிறோம் என்றால் பல தடைகளை தாண்டி வந்துள்ளோம். தடைகளை தவிடு பொடியாக்கும் தன்னம்பிக்கை இருக்க வேண்டும் என்றார். அரசியல்  என்பது ஒட்டுமொத்தமாக பெண்களுக்கான துறை கிடையாது.பெண்கள் அதில் முன்னேற வேண்டும் என்றால் பல சிரமங்களை எதிர்கொள்ள வேண்டி இருக்கும். பாதை ஒன்றும் மலர் பாதை கிடையாது, முற்களாலும் கற்களாலும் கால்களை குத்தி கிழிக்கும். ஆனால் அதிலும் வேகமாக முன்னேறினால் முன்னுக்கு வர முடியும் என தமிழிசை தெரிவித்தார். குறிப்பாக அதிகமாக பெண்கள் அரசியலுக்கு வர வேண்டும். படித்த பெண்கள் அரசியலுக்கு வர வர அரசியல் தூய்மையாகும் என பேசினார்.

First published:

Tags: Puducherry, Tamilisai, Tamilisai Soundararajan