முகப்பு /புதுச்சேரி /

புதுச்சேரியில் திடீர் மழை... வெப்பம் தணிந்ததால் பொதுமக்கள் உற்சாகம்!

புதுச்சேரியில் திடீர் மழை... வெப்பம் தணிந்ததால் பொதுமக்கள் உற்சாகம்!

X
புதுச்சேரியில்

புதுச்சேரியில் மழை

Puducherry Rain | புதுச்சேரியில் வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில் திடீரென மழை கொட்டி தீர்த்தது.

  • Last Updated :
  • Puducherry (Pondicherry), India

புதுச்சேரியில் கடந்த சில நாட்களாகவே கோடை வெயில் சுட்டெரித்து வந்த நிலையில், காலை முதல் நகரம் மற்றும் கிராம பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்து வருவதால் புதுச்சேரியில் குளிர்ச்சியான சூழல் நிலவி வருகிறது.

தென் இந்திய பகுதிகளில், வளி மண்டலத்தின் கீழடுக்குகளில் கிழக்கு திசை காற்றும், மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுவகிறது. இதன் காரணமாக தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

இந்த நிலையில், இன்று காலை முதல் புதுச்சேரி கடற்கரை, உப்பளம், ராஜ்பவன், உருளையான்பேட்டை, முத்தியால்பேட்டை, உள்ளிட்ட நகர பகுதிகளிலும் அதே போல் பாகூர், திருக்கனூர், மதகடிப்பட்டு, சேதரபட்டு, சோம்பட்டு, காலாபட்டு, உள்ளிட்ட கிராம பகுதிகளிலும் இடியுடன் கூடிய மழை பெய்தது.

இதையும் படிங்க | அன்னை வருகை தினம்.. புதுச்சேரி அரவிந்தர் ஆசிரமத்தில் குவிந்த பக்தர்கள்!

கடந்த சில நாட்களாகவே புதுச்சேரியில் கோடை வெயில் சுட்டெரித்து வந்த நிலையில், இந்த மழையின் காரணமாக புதுச்சேரியில் குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது. இந்நிலையில், இந்த திடீர் மழை காரணமாக காலையில் வேலைக்கு செல்பவர்கள், சாலை யோர கடைகள் வைத்திருப்பவர்கள் உள்ளிட்டோர் சீரமத்திற்கு உள்ளாகினர். எனினும், இந்த மழையால் வெப்பம் தணிந்ததால், புதுவை மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

top videos

    உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

    First published:

    Tags: Heavy rain, Local News, Puducherry