முகப்பு /செய்தி /புதுச்சேரி / கலைஞர்களுடன் தாண்டியா நடனம் ஆடி மகிழ்ந்த ஆளுநர் தமிழிசை சவுந்தர்ராஜன்...

கலைஞர்களுடன் தாண்டியா நடனம் ஆடி மகிழ்ந்த ஆளுநர் தமிழிசை சவுந்தர்ராஜன்...

கலைஞர்களுடன் தாண்டியா நடனம் ஆடி மகிழ்ந்த ஆளுநர் தமிழிசை சவுந்தர்ராஜன்...

புதுச்சேரி ஆளுநர் மாளிகையில் தமிழிசை சௌந்தர்ராஜன் தாண்டியா நடனம் ஆடி மகிழ்ந்தார்.

  • Last Updated :
  • Puducherry (Pondicherry), India

புதுச்சேரி ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற குஜராத், மகாராஷ்டிரா தின விழாவில், துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தாண்டியா நடனமாடி மகிழ்ந்தார்.

குஜராத், மகாராஷ்டிரா மாநிலங்கள் உருவான நாளை, நாட்டில் உள்ள அனைத்து ஆளுநர்கள் மாளிகையிலும் கொண்டாட மத்திய அரசு அறிவுறுத்தியது. அந்த வகையில், புதுச்சேரி ஆளுநர் மாளிகையிலும் இவ்விழா சிறப்பாக நடைபெற்றது. அப்போது, ரங்கலீலா கலை குழுவினர் குஜராத்தின் பாரம்பரிய நடனமாடினர். இவர்களுடன் துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனும் உற்சாகத்தோடு நடனமாடி மகிழ்ந்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த தமிழிசை சவுந்தரராஜனிடம், ரஜினிகாந்தியை விமர்சித்த ரோஜா குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு மழுப்பலாக பதிலளித்தார். புதுச்சேரியில், பெண் அரசு ஊழியர்களுக்கு வெள்ளிக்கிழமைகளில் 2 மணி நேரம் பணி குறைப்புக்கு, நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதாகவும் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார்.

top videos
    First published:

    Tags: Tamilisai Soundararajan