முகப்பு /புதுச்சேரி /

இனி ஈஸியாக சுமை தூக்கலாம்.. சூப்பர் கருவியை கண்டுபிடித்த புதுச்சேரி அரசு பள்ளி மாணவி..

இனி ஈஸியாக சுமை தூக்கலாம்.. சூப்பர் கருவியை கண்டுபிடித்த புதுச்சேரி அரசு பள்ளி மாணவி..

X
சுமை

சுமை தூக்கும் கருவி

Puducherry News : சுமைத்தூக்கும் தொழிலாளர்கள் பணியை எளிதாக்கும் கருவியை உருவாக்கிய புதுவை அரசு பள்ளி மாணவிக்கு குவியும் பாராட்டுக்கள்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Puducherry (Pondicherry), India

புதுச்சேரி கணுவாப்பேட்டை அரசு உயர்நிலை பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வரும் மாணவி தீபிகா. இவரது அறிவியல் ஆசிரியர் அனுசுயா வழிகாட்டுதலோடு சுமை தூக்கும் தொழிலாளர்கள் பணியை எளிதாக்க ஒரு கருவியை உருவாக்கியுள்ளார். மாணவியின் இந்த படைப்புக்கு புதுச்சேரியில் நடந்த மாநில அளவிலான அறிவியல் கண்காட்சியில் முதல் பரிசு கிடைத்தது. இதைத்தொடர்ந்து, கேரள மாநிலம் திருச்சூரில் நடந்த தென்னிந்திய அளவிலான அறிவியல் கண்காட்சியில் பங்கேற்ற தீபிகாவின் படைப்பு 3வது பரிசை வென்றது. இதனையொட்டி பள்ளி வளாகத்தில் பள்ளி தலைமை ஆசிரியர் தட்சணாமூர்த்தி தலைமையில் பாராட்டு விழா நடந்தது. தீபிகாவின் படைப்பு பலரையும் வெகுவாக கவர்ந்துள்ளது.

சுமையை குறைக்கிறது :

சுமை தூக்கும் தொழிலாளர்களுக்கு பணிபுரியும் இடங்களில் பல்வேறு சிரமங்கள் ஏற்படுகின்றன. குறிப்பாக, அதிக கனமான பொருட்களை தூக்கும் போது காயமடைகின்றனர். தசை, எலும்பு கோளாறு, கழுத்து வலி, தலை மற்றும் கண் அசைவு கோளாறு, முதுகெலும்பு பாதிப்பு போன்ற பிரச்சனைகள் ஏற்படுகிறது. மிகப்பெரிய அல்லது அதிக எடையுள்ள சுமைகளை சுமப்பதால் ஏற்படும் காயங்கள் மற்றும் சுளுக்கு ஆகியவை தொழிலாளர்களுக்கு பல பாதிப்புகளை உடலளவில் ஏற்படுத்துகிறது.

எனவே, முதுகு மற்றும் தலையில் அதிக எடையை சுமந்து செல்லும் தொழிலாளர்கள் சிரமத்தை போக்கும் விதமாக எளிதாக சுமை தூக்கும் கருவி வடிவமைக்கப்பட்டுள்ளது. இது உடல் முழுவதும் எடையை பிரித்து கொடுக்கிறது. முதுகெலும்பு பிரச்சனைகள் மற்றும் எலும்பு சிதைவு ஆகியவற்றை தடுக்கிறது. முதுகு மற்றும் தலையில் சுமையை சுமக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ள பல லட்சம் தொழிலாளர்களுக்கு இந்த கருவி ஒரு வரப்பிரசாதமாக அமையும்.

இதையும் படிங்க : துபாய்க்கு ஓட்டலில் நடனமாட சென்ற பெண் மர்மமான முறையில் உயிரிழப்பு... உடலை மீட்டு தர உறவினர்கள் கோரிக்கை

 மூங்கிலில் தயாரிக்கலாம் :

மூங்கில் அதிகம் கிடைக்கும் இடங்களில் இதை மூங்கிலில் தயாரிக்கலாம். மற்ற இடங்களில் இதை உலோகம், பிளாஸ்டிக், பிவிசி பைப் போன்ற பொருட்களாலும் செய்யலாம். இது முதுகு, தலை மற்றும் தள்ளுவண்டியில் சுமைகளை சுமக்கும் மூன்று முறைகளில் பயன்படுத்தலாம். இதில் கொடுக்கப்பட்டுள்ள 2 ஸ்குருவை (screw) பயன்படுத்தி ஒரு நிமிடத்தில் தயாரிப்பை மாற்றலாம். கட்டுமானத் தளங்கள், தொழிற்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் ரயில் நிலையங்களில் உள்ள தொழிலாளர்களுக்கு இந்த கருவி பயனுள்ளதாக இருக்கும்.

இது மடிக்கக்கூடிய மற்றும் பணியிடத்துக்கு எடுத்துச் செல்ல எளிதானது. அதேபோல் இதை எளிதாகவும் தயாரிக்கலாம் என்று புன்னகையுடன் தனது கண்டுபிடிப்பு குறித்து மாணவர்களிடம்  தீபிகா எடுத்துரைத்தார்.

First published:

Tags: Local News, Puducherry