முகப்பு /செய்தி /புதுச்சேரி / வெள்ளிக்கிழமை பூஜைக்காக பெண் அரசு ஊழியர்களுக்கு பணி நேரம் குறைப்பு- புதுச்சேரி ஆளுநர் அறிவிப்பு

வெள்ளிக்கிழமை பூஜைக்காக பெண் அரசு ஊழியர்களுக்கு பணி நேரம் குறைப்பு- புதுச்சேரி ஆளுநர் அறிவிப்பு

பெண் ஊழியர்கள்

பெண் ஊழியர்கள்

புதுச்சேரி அரசு அலுவலகங்களில் பணி புரியும் பெண்களுக்கு வெள்ளிக் கிழமை பூஜை செய்வதற்காக வேலை நேரம் குறைக்கப்பட்டுள்ளது.

  • Last Updated :
  • Puducherry (Pondicherry), India

தமிழ்நாட்டில் தொழிலாளர்களின் வேலை நேரத்தை 12 மணி நேரமாக உயர்த்தும் தொழிற்சாலைகள் சட்டத் திருத்த மசோதா இரு வாரங்களுக்கு முன்னர் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதாவுக்கு தி.மு.கவின் கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள், ம.தி.மு.க உள்ளிட்ட கட்சிகளே எதிர்ப்பு தெரிவித்தன. இருப்பினும் குரல் வாக்கெடுப்பு முறையில் நிறைவேற்றப்பட்டது.

தமிழ்நாடு முழுவதும் தொழிற்சங்கங்களும் எதிர்ப்பு தெரிவித்தன. எதிர்கட்சிகளும் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தது. அதனையடுத்து, அந்த மசோதாவை நிறுத்திவைப்பதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். அதனையடுத்து, தொழிலாளர்களின் வேலை நேரம் குறித்த விவாதங்கள் எழுந்தன. முன்னதாக, 12 மணி நேர வேலை சட்டத்துக்கு புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் ஆதரவு தெரிவித்திருந்தார்.

இந்தநிலையில், புதுச்சேரியில் அரசு அலுவலகங்களில் பணிபுரியும் பெண்களுக்கு வார வெள்ளிக்கிழமைகளில் காலையில் 2 மணி நேரம் தாமதமாக வரலாம் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக, புதுச்சேரி ஆளுநர் அலுவலகம் வெளியிட்ட அறிவிப்பில், ‘புதுச்சேரி அரசு அலுவலகங்களில் பணிபுரியும் பெண்களின் நலனைக் கருத்தில் கொண்டு அவர்கள் வழக்கமான வெள்ளிக்கிழமைப் பூஜைகள் மேற்கொள்வதற்கு ஏதுவாக ஒரு மாதத்தில் மூன்று வெள்ளிக்கிழமைகள் மட்டும் காலை 8. 45 முதல் காலை 10. 45 வரை 2 மணி நேரம் சிறப்பு அனுமதி அளிக்கப்படும்.

இதற்கான பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத்துறையின் கோப்புக்கு துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் அனுமதி அளித்துள்ளார். அதன்படி, 'சிறப்பு அனுமதி மாதத்தில் மூன்று வெள்ளிக்கிழமைகளுக்கு மட்டுமே வழங்கப்படும். இதனால் அரசு பணிகள் பாதிக்கப்படக்கூடாது.

பெண் அரசு ஊழியர்களுக்கு பணி நேரம் குறைப்பு- புதுச்சேரி அரசு அறிவிப்பு

top videos

    பெண்கள் மட்டுமே பணிபுரியும் இடங்களில் சுழற்சி முறையில் அனுமதி வழங்கலாம். மருத்துவமனைகள், காவல் நிலையங்கள், கல்வி நிறுவனங்கள் போன்ற நேரடி பொதுமக்கள் சேவை/அத்தியாவசியப் பணிகளில் உள்ள பெண்களுக்கு இந்த சிறப்பு அனுமதி பொருந்தாது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    First published:

    Tags: Puducherry