முகப்பு /செய்தி /புதுச்சேரி / ஓடும் பேருந்தில் ஓட்டுநருக்கு வலிப்பு... மரத்தில் மோதி 17 பேர் காயம்... பதற வைக்கும் சிசிடிவி காட்சி

ஓடும் பேருந்தில் ஓட்டுநருக்கு வலிப்பு... மரத்தில் மோதி 17 பேர் காயம்... பதற வைக்கும் சிசிடிவி காட்சி

மரத்தில் மோதிய பேருந்து

மரத்தில் மோதிய பேருந்து

Puducherry Bus Accident | ஓட்டுநர் உட்பட இருவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

  • Last Updated :
  • Puducherry (Pondicherry), India

புதுச்சேரியில் ஓட்டுநருக்கு வலிப்பு நோய் ஏற்பட்டதால், பேருந்து மரத்தில் மோதி விபத்துக்குள்ளானதில், 17 பேர் காயம் அடைந்தனர்.

மடுகரையில் இருந்து புதுச்சேரி நோக்கி, அம்மாநில அரசு பேருந்து பயணிகளுடன் சென்றது. நெட்டப்பாக்கம் கல்மண்டபம் அருகே சென்று கொண்டிருந்த போது, ஓட்டுநருக்கு வலிப்பு ஏற்பட்டுள்ளது. அப்போது, ஓட்டுநர் அலறியபடி ஸ்டியரிங்கை பிடித்ததாக கூறப்படுகிறது. எதிர்பாராத இந்த சம்பவத்தில் சாலை ஓரத்தில் இருந்த மரத்தில் மோதி பேருந்து விபத்துக்குள்ளானது.

இதையும் படிங்க: திகார் சிறையில் கேங்ஸ்டர் படுகொலை - தமிழ்நாடு போலீசார் 7 பேர் சஸ்பெண்ட் ஏன்?

விபத்தில் ஓட்டுநர் உள்பட 17 பேர் காயம் அடைந்தனர். உடனடியாக அனைவரும் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், ஓட்டுநர் உட்பட இருவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கண்காணிப்பு கேமரா காட்சிகளை வைத்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

top videos
    First published:

    Tags: CCTV, Puducherry