முகப்பு /புதுச்சேரி /

கொளுத்தும் வெயில்.. புதுச்சேரியில் சாலையோர குடிநீர் குழாயில் தாகத்தை தீர்த்த ஆடு!

கொளுத்தும் வெயில்.. புதுச்சேரியில் சாலையோர குடிநீர் குழாயில் தாகத்தை தீர்த்த ஆடு!

X
தாகம்

தாகம் தீர்த்த ஆடு

Puducherry goat drink water | புதுச்சேரியில் சாலையோர குடிநீர் குழாயில் தண்ணீர் குடித்து தாகத்தை தீர்த்துக் கொண்ட ஆடு பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

  • Last Updated :
  • Puducherry (Pondicherry), India

புதுச்சேரியில் நாளுக்கு நாள் வெயில் அதிகரித்துக் கொண்டே வருவதால் சுமார் 98 டிகிரிக்கு மேல் புதுச்சேரியில் கடந்த ஒரு வாரமாக வெயில் அடிப்பதுடன் அனல் காற்று வீசி வருகிறது.

இதனால் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வரவே அஞ்சுகின்றனர். மேலும், வெளியே செல்லும் பொதுமக்கள் வெயிலின் தாக்கத்திலிருந்து தப்பித்துக் கொள்ள பழங்கள் பழச்சாறுகள் அருந்தி வருகின்றனர். மனிதர்கள் மட்டும் வெயிலின் தாக்கத்திற்கு ஆளாகவில்லை. கால்நடைகளும் தான் ஆளாகின்றன.

இதையும் படிங்க | வெள்ளிக்கிழமை பூஜைக்காக பெண் அரசு ஊழியர்களுக்கு பணி நேரம் குறைப்பு- புதுச்சேரி ஆளுநர் அறிவிப்பு

இந்நிலையில், புதுச்சேரியில் கடலூர் சாலையில் நீதிமன்றம் எதிரே உள்ள சாலை ஓரத்தில் உள்ள குடிநீர் குழாயில் தாகம் தாங்க முடியாத ஒரு ஆடு, குடிநீர் குழாயில் வரும் தண்ணீரை குடித்துக் கொண்டே இருந்தது. இதனை சாலையில் செல்வவர்கள் பார்த்தபடியே ரசித்து சென்றனர்.

top videos

    உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

    First published:

    Tags: Local News, Puducherry, Summer Heat