முகப்பு /புதுச்சேரி /

புதுவை வனத்துறைக்கு புதிய வரவு.. 4 குட்டிகளை ஈன்ற மான்..

புதுவை வனத்துறைக்கு புதிய வரவு.. 4 குட்டிகளை ஈன்ற மான்..

X
புதுச்சேரி

புதுச்சேரி

Puducherry News : புதுச்சேரி வனத்துறையின் கட்டுப்பாட்டிலுள்ள மான் புதிதாக 4 குட்டிகளை ஈன்றுள்ளது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Puducherry (Pondicherry), India

புதுச்சேரி முதலியார்பேட்டை சுதேசி மில் வளாகத்தில் வனத்துறை இயங்கி வருகிறது. இங்கு, புதுச்சேரி அதன் சுற்றுவட்டார பகுதிகளில் அடிபட்டு ஆபத்தான நிலையில் உயிருக்கு போராடும் வன விலங்குகளை காப்பாற்றி சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. வனவிலங்குகள் குணமடைந்தவுடன் காட்டுப்பகுதிக்கு கொண்டு சென்று விட்டு விடுவது வழக்கம். இதேபோல் கடந்த காலங்களில் நரி, முள்ளம்பன்றி, எறும்பு திண்ணி, மயில் உள்ளிட்ட வன விலங்களை காப்பாற்றி சிகிச்சையளித்து காட்டுக்குள் விட்டுள்ளனர். இதற்காக வனவிலங்கு சிகிச்சை மற்றும் பாதுகாப்பகத்தினை செயல்படுத்தி வருகின்றனர். அதில், கால்நடைத்துறை மருத்துவர் குமரன் தலைமையிலான மருத்துவர்கள் சிகிச்சையளித்து வருகின்றனர்.

இந்நிலையில், தற்போது இங்கு மான்கள், கிளிகள், மலைப்பாம்பு, நல்லபாம்பு, கண்ணாடி விரியன் உள்ளிட்ட பாம்புகள், நரிக்குறவர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட கிளிகள், பறவைகளை பராமரித்து வருகின்றனர். இப்படி பரமாரிக்கப்பட்டு வரும் மான்கள் 4 குட்டிகளை ஈன்றுள்ளது. பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருக்கும் இந்த மான்கள் துள்ளி குதித்து, தாவி ஓடும் அழகை பார்க்கவே கண்கொள்ளா காட்சியாக இருக்கிறது.

First published:

Tags: Local News, Puducherry