முகப்பு /புதுச்சேரி /

"லேட்டஸ்ட் பாசமலர் படம் தான் பிச்சைக்காரன்- 2" புதுச்சேரி ரசிகர்கள் விமர்சனம்!

"லேட்டஸ்ட் பாசமலர் படம் தான் பிச்சைக்காரன்- 2" புதுச்சேரி ரசிகர்கள் விமர்சனம்!

X
பிச்சைக்காரன்

பிச்சைக்காரன் 2 ரிவ்யூ

Pichaikaran 2 movie review | விஜய் ஆண்டனி, இயக்கி நடித்துள்ள பிச்சைக்காரன்- 2 திரைப்படம் எப்படி இருக்கிறது என்று புதுச்சேரியில் ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

  • Last Updated :
  • Puducherry (Pondicherry), India

விஜய் ஆண்டனி நடிப்பில் கடந்த 2016 ஆம் ஆண்டு வெளியான "பிச்சைக்காரன்” திரைப்படம் மாஸ் ஹிட் ஆனது. அதனை தொடர்ந்து தற்போது "பிச்சைக்காரன் 2" திரைப்படத்தை விஜய் ஆண்டனி இயக்கி, நடித்து, இசையமைத்து, எடிட்டிங்கிலும் பணியாற்றியுள்ளார்.

இந்த படத்தில் கதாநாயகியாககாவ்யா தாப்பர் மற்றும் முக்கிய கதாபாத்திரத்தில் ராதாரவி உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர்.இத்திரைப்படம் திரையரங்குகளில் வெளியானநிலையில் இத்திரைப்படம் எப்படி இருக்கிறது என்று புதுச்சேரி ரசிகர்களிடம் கேட்டபொழுது, விஜய் ஆண்டனி வழக்கம்போல் சிறப்பான நடிப்பையே கொடுத்திருக்கிறார். கதாநாயகி காவ்யா தாப்பர் கவர்ச்சியில் டாப் கியர் ஏற்றுகிறார். ஆனால் பல காட்சிகளில் காணமால் போய்விடுகிறார்.

மேலும் ராதா ரவி, ஜான் விஜய், தேவ் கில், ஒய்.ஜி.மகேந்திரன் போன்ற பலரும் அவர்களுக்கு கொடுக்கப்பட்ட கதாப்பாத்திரத்தில் சிறப்பாக நடித்திருக்கிறார்கள் என்றனர். மேலும் லேட்டஸ்ட் பாசமலர் படத்தை மீண்டும் பார்க்கும் விதத்தில்அண்ணன் தங்கச்சி பாசத்தை திரையில் மிகவும் சிறப்பாக காட்டி உள்ளன என்று கூறினார்கள்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

First published:

Tags: Local News, Movie review, Puducherry