புதுச்சேரி கிருமாம்பாக்கம் அடுத்துள்ள காட்டுக்குப்பம் கிராமத்தில் வசித்து வருபவர் திருநங்கையான கோபி (எ) கோபிகா. 6ம் வகுப்பு வரை படித்துள்ள கோபிகா கடந்த 30 வருட காலமாக பெண் குரலில் இசைக் கச்சேரிகள், மேடை கச்சேரிகள் உள்ளிட்டவற்றில் பாடி அசத்தி வருகிறார். மேலும், இவர் பிரபல தொலைக்காட்சி பாடல் நிகழ்ச்சியில் பங்கேற்று தனது திறமையை வெளிப்படுத்தி பல்வேறு விருதுகளையும் வென்றுள்ளார்.
மேடை பாடகியாக வலம் வரும் கோபிகாவிற்கு திரைத்துறையில் பின்னணி பாடகியாக வலம் வர வேண்டும் என்பதற்காக கடுமையாக உழைத்து வருகிறார். இதுகுறித்து கோபிகா கூறுகையில், ”நான் திருநங்கையாக மாறிய பின்னரும் கூட எனது வீட்டில் நல்ல அரவணைப்பும் ஊக்கமும் கொடுத்தார்கள். என்னைப் போன்ற திருநங்கைகள் அனைத்து துறைகளிலும் சாதித்து முத்திரை பதித்து வருகின்றனர்.
திருநங்கை என்பவர்கள் 3ம் பாலினத்தவர். அவர்களுக்கும் உணர்வுகள் உண்டு, வெறுப்பு உண்டு, ஆசைகள் உண்டு என்பதை புரிந்துகொள்ள வேண்டும். குடும்ப உறுப்பினர்கள் அவர்களை வெறுக்க வேண்டாம். திருநங்கையாக இருக்கும் அனைவருக்கும் நல்ல எதிர்காலம் இருக்கிறது. திருநங்கைகள் என்றாலே யாசகம் கேட்பது, அடாவடியாக பேசுவது, அநாகரீகமாக நடந்து கொள்வது என்ற பிம்பம் இவ்வுலகில் நிலவி வருகிறது.
இதை அனைத்தையும் உடைத்து எறிந்து இன்று திருநங்கைகள் பல்வேறு துறைகளில் கால் பதித்து வருவது பெருமைக்குரிய விஷயமாக நான் கருதுகிறேன். எங்களைப் போன்றவர்களை ஆதரித்து அரசு துறைகளில் பணிபுரிய வாய்ப்புகளை மத்திய மாநில அரசுகள் ஏற்படுத்தி தர வேண்டும் என்று இதன் மூலம் கேட்டுக்கொள்கிறேன்” என்று அவர் தெரிவித்தார்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
தடை கற்களையும் படிகற்களாக மாற்றி முன்னேற வேண்டும் என்பதே கோபிகா போன்று பல சவால்களை சந்தித்து அதை சாதனைகளாக மாற்றியவர்கள் நமக்கு கூறும் அறிவுரை ஆகும்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Puducherry