முகப்பு /புதுச்சேரி /

காட்டுராஜா பிரியாணி கடை புதுச்சேரி மக்களின் ஃபேவரைட்டாக இருப்பதன் ரகசியம் தெரியுமா?

காட்டுராஜா பிரியாணி கடை புதுச்சேரி மக்களின் ஃபேவரைட்டாக இருப்பதன் ரகசியம் தெரியுமா?

X
காட்டு

காட்டு ராஜா பிரியாணி கடை

Puducherry News : புதுச்சேரி மக்கள் விரும்பும் காட்டு ராஜா பிரியாணி கடை.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Puducherry (Pondicherry), India

புதுச்சேரி கோட்டகுப்பம் எல்லை பகுதியில் காட்டு ராஜா பிரியாணி கடை உள்ளது. சுமார் 35 வருடங்களுக்கு மேல் உள்ள இந்த கடை அவ்வளவு ஃபேமஸ். தன் தந்தை ஆரம்பித்து வைத்த கடையை விடக்கூடாது என்று அலெக்ஸ் மீண்டும் பிரியாணி கடையை ஆரம்பித்தார். ஊருக்குள் நிறைய பிரியாணி உணவுகள் இருந்தாலும் புதுவை பகுதியில் சிறந்த பிரியாணி ஆக காட்டு ராஜா பிரியாணி உணவகத்தில் கறி தனியாக எடுத்து வருவார்கள். சால்னா தனியாக எடுத்து வருவார்கள். பிரியாணியை தனியா எடுத்து வருவார்கள்.

இது அனைத்தையும் தவாவில் சேர்த்து கொடுப்பதுதான் கடையின் சிறப்பு. இங்கு விற்கப்படும் பிரியாணி விலை 60 மற்றும் 70 மட்டுமே. உணவகத்தின் சிறப்பு என்னவென்றால் உழைக்கும் மக்களின் உணவகம் என்றே அழைக்கிறார்கள். கடுமையாக வேலை செய்பவர்களுக்கு குறிப்பாக கூலி தொழிலாளிகளுக்கு மிகவும் பிடித்த உணவாகும். தற்போது காலப்போக்கில் ஐடி தொழில் செய்பவர்கள் உட்பட சுற்றுலா பயணிகள் உட்பட தினமும் வரிசையில் நின்று தான் பிரியாணி வாங்குகின்றனர். குறிப்பாக காலை 11:30 மணி முதல் 1:30 வரை மட்டுமே கடையில் பிரியாணி கிடைக்கும் என்பதால் நீண்ட வரிசையில் நின்று பிரியாணியை வாங்கி மகிழ்வர்.

First published:

Tags: Food, Local News, Puducherry