படிப்பு, தேர்வு மட்டுமே வாழ்க்கை இல்லை என்பதை பிள்ளைகளுக்கு பெற்றோர்கள் உணர்த்த வேண்டும், எதையும் பிள்ளைகள் மீது திணிக்க கூடாது என்று புதுச்சேரியைச் சேர்ந்த குழந்தைகள் மருத்துவர் கூறியுள்ளார்.
இது குறித்து பேசிய அவர், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியானது. இதில் மாணவ மாணவிகள் சிறப்பாக தேர்வு எழுதி அதிக மதிப்பெண் பெற்றுள்ளனர். அவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதாக கூறிய அவர், சில குழந்தைகள் மதிப்பெண் குறைவு காரணமாக மன உளைச்சல் ஏற்பட்டு தற்கொலை செய்து கொள்கின்றனர்.
அதேபோல் நீட் பயமும் மாணவர்கள் மன அழுத்தத்தின் காரணமாக தற்கொலை செய்து கொள்கின்றனர். இதற்கு பெற்றோர்களும், பள்ளிகளில் உள்ள ஆசிரியர்களும் வெற்றி தோல்விகள் குறித்து சொல்லிக் கொடுக்க வேண்டும். அதேபோல் மாணவர்கள் குழந்தைகள் சில காலங்களுக்கு முன்பு மைதானங்கள் மற்றும் தெருக்களில் சக மாணவர்களுடன் விளையாடுவார்கள். என அதில் தோல்வி அடைந்தாலும் அடுத்த முறை எவ்வாறு வெற்றி பெறலாம் என்று யோசித்து மாணவர்கள், குழந்தைகள் அவ்வாறு விளையாடி அடுத்த முறை வெற்றி அடைவார்கள்.
ஆனால் தற்பொழுது அலைபேசியில் (மொபைல்) முழு நாளையும் அதில் ஈடுபடுத்துவதால், இந்த கைபேசியில் விளையாடும்போது தோல்வியடைந்தால் அதை உடனே மறுதடவை உபயோகம் செய்து தொடக்கத்திலிருந்து வருகின்றனர். ஈதனால், தோல்வி என்பதை ஏற்றுக் கொள்ளாத மனநிலையில் தற்போது மாணவர்கள் உள்ளனர்.
அதேபோல் மாணவர்களுக்கு பெற்றோர்கள் சில ஆலோசனை வழங்க வேண்டும். தேர்வு, பள்ளி படிப்பு மட்டுமே வாழ்க்கை என்பது இல்லை. அவர்கள் மீது அதனை திணிக்கவும் கூடாது. அதேபோல் முதல் மதிப்பெண், அதிக மதிப்பெண் ஏற்றவர் தான் வாழ்க்கையில் முன்னேறிய உள்ளவர்கள் என்பது கிடையாது.
அதேபோல் தேர்வில் தோல்வியடைந்தவர்களும் வாழ்க்கையில் தோல்வி அடைந்து விடுவார்கள் என்பது இல்லை. அனைவருக்கும் வழி என்று ஒன்று உள்ளன. அந்த வழியில் நாம் பயணித்தாலே வாழ்க்கையில் மென்மேலும் வளரலாம். அதனால் தற்கொலை செய்து கொள்வது ஒரு முடிவு இல்லை வாழ்க்கை என்பது நிறையாக உள்ளது. பனிரெண்டாம் தேர்வு மற்றும் நீட் தேர்வு மட்டுமே வாழ்க்கை இல்லை. ஒரு முறை தோல்வி அடைந்தால் பலமுறை வாய்ப்புகள் உள்ளது என்பதை மாணவர்கள் கருத்தில் கொள்ள வேண்டும் என்று தெரிவித்தார்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: 12th exam, Local News, Puducherry, School students