முகப்பு /புதுச்சேரி /

மக்களே உஷார்...உடைந்த பாலத்தின் மீது பிரவேசித்தால் உயிருக்கே ஆபத்தாக முடியும்...

மக்களே உஷார்...உடைந்த பாலத்தின் மீது பிரவேசித்தால் உயிருக்கே ஆபத்தாக முடியும்...

X
உடைந்த

உடைந்த பாலத்தின் மீது பிரவேசித்தால் உயிருக்கே ஆபத்தாக முடியும்...

Puducherry Bridge Damage | புதுவையில் உடைந்த பாலத்தின் மீது சுற்றுலா பயணிகள் ஆபத்தை உணராமல் புகைப்படம் எடுக்க செல்வதால் பாலத்தை முற்றிலும் இடிக்க கோரிக்கை 

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Puducherry, India

புதுச்சேரி கடற்கரையில் அமைந்துள்ள பாலம் எந்த நேரமும் இடிந்து விழும் அபாயம் இருப்பதால் பொதுமக்கள் அந்த பகுதியில் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

புதுவையில் பிரெஞ்சு ஆட்சியின் போது காந்தி சிலையின் பின்புறம் 1862-ம் ஆண்டு 195 மீட்டர் நீளமுள்ள பாலம் அமைக்கப்பட்டது. இந்த பாலம் 1952-ம் ஆண்டு வீசிய சூறாவளியின் போது சேதமடைந்தது. இதையடுத்து இந்த பகுதியில் கப்பல் போக்குவரத்தும் நிறுத்தப்பட்டது.

இதன் பிறகு 1958-ம் ஆண்டு இப்போதுள்ள சீகல்ஸ் ஓட்டல் அருகில் துறைமுக கட்டுமான பணிகள் நடந்தது. துறைமுகத்திற்கு சரக்குகளை ஏற்றி இறக்குவதற்காக பழைய பாலம் மீண்டும் புனரமைக்கப்பட்டது. 4 ஆண்டுகள் பணிகள் முடிவடைந்த நிலையில் 1962-ம் ஆண்டு துறைமுகம் தனது செயல்பாட்டை மீண்டும் தொடங்கியது. பாலம் சேதம் துறைமுக முகத்துவாரத்தில் மணல் தூர்ந்ததால் துறைமுக செயல்பாடு படிப்படியாக குறைந்து 2004-ம் ஆண்டு முற்றிலும் முடங்கியது.

மத்திய அரசின் சாகர்மாலா திட்டத்தின் மூலம் இந்த துறைமுகத்தை மீண்டும் புனரமைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் கப்பல் போக்குவரத்து தொடங்கப்படவில்லை. இதற்கிடையே துறைமுக பாலம் நாளுக்கு நாள் சேதம் அடைந்து கொண்டே இருந்தது. சுற்றுலா பயணிகள் செல்ல அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், திரைப்பட படப்பிடிப்புகள் மட்டும் அவ்வப்போது நடைபெற்றது. இதற்கிடையே துறைமுகம் பாலம் கடந்த புயலின் போது இடிந்து விழுந்தது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

சுமார் ஓர் ஆண்டுக்கும் மேலாக இடிந்த பாலத்தின் மிச்சங்கள் எந்த நேரத்திலும் விழலாம் என்ற அபாய நிலையில் உள்ளது. புதுச்சேரிக்கு வரும் சுற்றுலா பயணிகள் பாலத்தின் நிலை அறியாமல் அதன் மேல் நின்று புகைப்படம் எடுத்துக் கொள்கிறார்கள். மேலும் பாலத்தின் மீது ஏறி கடலில் குதித்து குளிக்கின்றனர் ஒரு சில உள்ளூர் மீனவர்களும் பாலத்தின் மீது இருந்து மீன் பிடிக்கின்றனர்.

இதனால் உயிருக்கே ஆபத்து ஏற்படுத்தும் நிலையில் இந்த பழமை வாய்ந்த துறைமுக பாலத்தை அரசு உடனடியாக புதுபித்து தர வேண்டும் அவ்வாறு இல்லை என்றால் முழுவதுமாக இடித்து விட வேண்டும் என அப்பகுதியில் உள்ள வியாபாரிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

First published:

Tags: Local News, Puducherry