முகப்பு /செய்தி /புதுச்சேரி / Watch : தினமும் டீ கடைக்கு வந்து பால் ஏடு வாங்கி செல்லும் காக்கா ! ஆச்சரியம்...

Watch : தினமும் டீ கடைக்கு வந்து பால் ஏடு வாங்கி செல்லும் காக்கா ! ஆச்சரியம்...

பால் ஆடை கேட்கும் காகம்

பால் ஆடை கேட்கும் காகம்

Puducherry crow | புதுச்சேரியில் காகம் ஒன்று தினமும் டீக்கடைகாரர் ஒருவரிடம் பால் ஆடை வாங்கி சாப்பிட்டு செல்லும் காட்சிகள் வெளியாகியுள்ளது.

  • Last Updated :
  • Puducherry (Pondicherry), India

புதுச்சேரியில் டீக்கடைக்காரரிடம்  தினமும் பால் ஏடை பெற்று செல்லும் காகத்தின் வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

புதுச்சேரி லாசுப்பேட்டை உழவர் சந்தை அருகே டீக்கடை நடத்தி வருபவர் ரவிச்சந்திரன். கடந்த நான்கு ஆண்டுகளாக இப்பகுதியில் அவரை டீக்கடையை நடத்தி வருகிறார். இவரது கடைக்கு காலையில் தினமும் வரும் காக்கை ஒன்று பிஸ்கட், சமோசா போன்றவர்களை வைத்தால் சாப்பிடுவதில்லை.

அவர் கொடுக்கும் பால் ஏடை சாப்பிட்டு தான் செல்கிறது. இதற்காக தினமும் காலையில் டீக்கடைக்கு வரும் காக்கை..."கா..கா.." என கரைந்து ரவிச்சந்திரனை அழைக்கிறது.இதனையடுத்து பாலில் இருந்து ஏடை வடி கட்டி ஒரு கப்பில் அவர் வைக்க அதனை காக்கை எடுத்து  சென்று பத்திரமாக சாப்பிடுகிறது.

இந்த காட்சி தினமும் லாஸ்பேட்டை உழவர்சந்தை எதிரே நிகழ்கிறது. கொரோனா காரணமாக இரண்டு ஆண்டுகள் கடையை மூடி விட்டு மீண்டும் திறந்த போது வழக்கம் போல் காலை 7 மணிக்கு அதே காக்கம் வந்து பால் ஏடை கேட்டு பெற்று சென்றது. தினமும் காலையும் மாலையும் இதே காகம் வந்து பால் ஏடை கேட்டு பெறுகிறது என புன்னகையுடன் சொல்கிறார்.

top videos
    First published:

    Tags: Local News, Puducherry