முகப்பு /புதுச்சேரி /

விடிய விடிய சேற்றில் சிக்கி தவித்த பசு மாடு.. பல மணி நேர போராட்டத்திற்கு பிறகு மீட்பு! புதுச்சேரியில் பரபரப்பு!

விடிய விடிய சேற்றில் சிக்கி தவித்த பசு மாடு.. பல மணி நேர போராட்டத்திற்கு பிறகு மீட்பு! புதுச்சேரியில் பரபரப்பு!

X
மாடு

மாடு மீட்பு

Puducherry cow rescue | புதுச்சேரி லாஸ்பேட்டை பகுதியில் சேற்றில் சிக்கிய பசுமாடு விடிய விடிய வெளியே வரமுடியாமல் தவித்துள்ளது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Puducherry | Puducherry (Pondicherry)

புதுச்சேரியில் சேற்றில் சிக்கிய பசுமாட்டை தீயணைப்புத்துறையினர் பல மணி நேரமாக போராடி பத்திரமாக மீட்டனர்.

புதுச்சேரி லாஸ்பேட்டை, லட்சுமி நகர் விரிவாக்க பகுதியில் அம்மாள் பள்ளி பின்புறத்தில் காலி மனை சேறும் சகதியமாம் உள்ளது. அப்பகுதிக்கு மேய்ச்சலுக்காக வந்த பசுமாடு ஒன்று அப்பகுதியில் கொட்டப்பட்டுள்ள சேற்றை அறியாமல் உள்ளே நுழைந்துள்ளது. ஆனால் பல மணி நேரம் போராடியும் வெளியே வர முடியாமல் இரவு முழுவதும் சிக்கித் தவித்துள்ளது.

இதனை மறு நாள் கண்ட அப்பகுதி மக்கள் பதறியடித்து தீயணைப்புத்துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர். உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்ற தீயணைப்புத்துறையினர் பல மணி நேர போராட்டத்திற்கு பிறகு பசுமாட்டை பத்திரமாக மீட்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில், அப்பகுதியில் அதிகளவில் சேறு உள்ளதால், துர்நாற்றம் வீசுவதாகவும், கால்நடைகள் சேற்றில் சிக்கி கொள்வதாகவும் அப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டி வருகின்றனர். இதனால் இந்த சேற்றை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

First published:

Tags: Cow, Local News, Puducherry