முகப்பு /செய்தி /புதுச்சேரி / புதுச்சேரி முதல்வர் வீட்டை முற்றுகையிட்ட ரேஷன் கடை ஊழியர்கள்: கூலாக டென்னிஸ் விளையாடிய ரங்கசாமி

புதுச்சேரி முதல்வர் வீட்டை முற்றுகையிட்ட ரேஷன் கடை ஊழியர்கள்: கூலாக டென்னிஸ் விளையாடிய ரங்கசாமி

புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி

புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி

Puducherry CM Rangasamy House Protest | முதல்வர் வீட்டை முற்றுகையிட்ட போராட்டக்காரர்களை போலீசார் வலுக்கட்டாயமாக வெளியேற்ற முயன்றதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Puducherry (Pondicherry), India

பணிநிரந்தரம் செய்யக்கோரி ரேஷன் கடை ஊழியர்கள் வீட்டை முற்றுகையிட்ட போது புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி டென்னிஸ் விளையாடிக் கொண்டிருந்தது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

புதுச்சேரி மற்றும் காரைக்காலில் உள்ள ரேஷன் கடைகளில் பணியாற்றும் 338 ஒப்பந்த பணியாளர்களுக்கு 55 மாதங்களாக ஊதியம் வழங்கப்படவில்லை. இதனை உடனே வழங்க வேண்டும், பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என வலியுறுத்தி அவர்கள் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் இன்று முதலமைச்சர் ரங்கசாமியின் வீட்டை 100க்கும் மேற்பட்டோர் முற்றுகையிட்டனர்.

Also Read: 7 ஆண்டுகளாக மின்சாரம் இல்லாமல் தவிக்கும் புதுவை கடற்கரை வியாபாரிகள்

அங்கு அரை மணிநேரத்திற்கும் மேலாக டென்னிஸ் விளையாடிக்கொண்டிருந்த முதலமைச்சர் ரங்கசாமி, வீட்டிற்குள் சென்ற போது 15 ஆண்டுகளாக வேலை செய்யும் தங்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும் என போராட்டக்காரர்கள் கோரிக்கை விடுத்தனர்.

அதற்கு, தான் முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டு 2 ஆண்டுகள் தான் ஆகிறது எனவும், உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறுவது நியாயமா என்றும் கேட்டுவிட்டு வீட்டிற்குள் சென்றார்.

இதையடுத்து போராட்டக்காரர்களை போலீசார் வலுக்கட்டாயமாக வெளியேற்ற முயன்றதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதையடுத்து, அங்கிருந்தவர்கள் புதுச்சேரி - திண்டிவனம் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

First published:

Tags: Puducherry