முகப்பு /செய்தி /புதுச்சேரி / என்னுடைய தொடர் வெற்றிக்கு காரணம் இவர்தான்.. மாணவிகளிடம் மனம் திறந்த முதல்வர் ரங்கசாமி..

என்னுடைய தொடர் வெற்றிக்கு காரணம் இவர்தான்.. மாணவிகளிடம் மனம் திறந்த முதல்வர் ரங்கசாமி..

மாணவர்களுடன் புதுச்சேரி முதலமைச்சர்

மாணவர்களுடன் புதுச்சேரி முதலமைச்சர்

தனது ஆன்மீக குரு அப்பாசாமியால் தான் தொடர்ந்து ஜெயிக்கிறேன் மாணவிகளிடம் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி மனம் திறந்து பேசியுள்ளார்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Puducherry (Pondicherry), India

சட்டப்பேரவை நிகழ்வுகளை மாணவர்கள் அறிந்து கொள்ளும் வகையில் பல்வேறு அரசுப் பள்ளிகளைச் சார்ந்த மாணவ மாணவியர்கள் தினமும் சட்டப்பேரவை நிகழ்வுகளை நேரில் அறிந்து கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, கடந்த 2 நாட்களாக திருவள்ளவர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி மற்றும் ஜீவானந்தம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி ஆகிய பள்ளிகளைச் சேர்ந்த மாணவ மாணவியர்கள் சட்டப்பேரவை நிகழ்வுகளை நேரில் அறிந்து சென்றனர்.

மூன்றாம் நாளான இன்று சுசிலாபாய் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த மாணவியர்கள் புதுச்சேரி சட்டப்பேரவை நிகழ்வுகளை நேரில் பார்த்த பின் முதலமைச்சர் ரங்கசாமியை சந்தித்து உரையாடினர். அப்போது மாணவிகளிடம் தனது அனுபவங்களை முதல்வர் பகிர்ந்துகொண்டார். அவர் கூறுகையில் "படித்துவிட்டு பல பதவிகள் போகலாம். ஆனால் எம்எல்ஏ, அமைச்சர் முதலமைச்சர் என்பது அதிர்ஷ்டமான காரியம். வீட்டில் சும்மா தான் இருந்திருப்பார்கள் எம்எல்ஏவாக ஆகி இருப்பார்கள்.

அதற்கு நான் தான் முழு உதாரணம். நான் முழுவதாக ஊர் சுற்றிக் கொண்டிருந்தேன். நல்லா சாப்பிடுவேன். ஊர் சுற்றிக் கொண்டிருந்தேன். வீட்டுக்கு சம்பாதித்து எதுவும் குடுத்ததில்லை. சாப்பிட்டதோடு சரி. ஜாலியாக இருந்தேன். செல்ல பிள்ளையாக வைத்திருந்தார்கள். ஊர் ஊராய் சுற்றி அதிகாரிகளை பார்ப்பேன்.

தலைமைச் செயலகம் செல்வேன். மக்களுக்கு உதவி செய்வேன். வேளாண் துறையில் எனக்கு பலரும் நண்பர்கள் உண்டு. நான் போனால் எதை வேண்டுமானாலும் செய்து கொடுப்பார்கள். அனைத்து வட்டார வளர்ச்சி அலுவலகம், கொம்யூன் பஞ்சாயத்து அலுவலகம் என நேரடியாக அதிகாரிகளை சந்திப்பேன்.

நண்பரை தேர்தலில் நிற்க வைத்து ஜெயிக்க வைத்தோம். நான் நிற்க விரும்பவில்லை என்னை லேபர் ஆபிஸர் ஆக போக சொன்னார்கள். அதுவும் நான் ஒத்துக்கவில்லை. திடீரென தான் தேர்தலில் நின்றேன். பின் காங்கிரஸில் என்னை வேட்பாளர் என அறிவித்தார்கள். நான் வெற்றி பெறுவேன் என்றார்கள். நான் காங்கிரஸே கிடையாது காங்கிரஸில் சீட்டு கொடுத்தார்கள். முதல் தேர்தல் நான் வெற்றி பெறவில்லை. நான் தான் வெற்றி பெறுவேன் பலர் நினைத்தார்கள். வெற்றி பெறவில்லை. அப்ப என்னோட சாமி பார்த்தார். அவர் போடா போய் நில் அடுத்த 10 மாதத்தில் தேர்தல் என்றார்.

இதையும் படிங்க: சொந்தக் கட்சியினரையே கட்டுப்படுத்த முடியாத முதல்வர் - ஈபிஎஸ் விமர்சனம்!

சொன்னபடியே 1991 ல் தேர்தல். நான் ஜெயிப்பேனா தோப்பா தோல்வி பெறுவேனா...? காசு இல்லையே...? என்று சாமி (அப்பா பைத்தியம் சாமிகள்)யிடம் கேட்டேன்.. அவர் ... போ..! என்றார். இன்று வரை ஜெயித்துக் கொண்டுதான் இருக்கிறேன். அமைச்சர் பதவி கேட்கவில்லை, கொடுத்தார்.. முதல்வர் பதவியும் கொடுத்தார்கள்" என்று கூறினார். இந்த சந்திப்பின் போது சட்டப்பேரவைத் தலைவர் செல்வம், மாவட்ட ஆட்சியர் மணிகண்டன், கல்வித்துறை செயலர் ஜவஹர் ஆகியோர் உடனிருந்தனர்.

First published:

Tags: Pudhucherry, School students