புதுச்சேரியில் அனைத்து பெண்களுக்கும் பேருந்தில் பயணிக்க இலவசம் என அம்மாநில முதலமைச்சர் ரங்கசாமி தெரிவித்துள்ளார்.
புதுச்சேரியில் பட்ஜெட் மீதான விவாதத்தில் சட்டமன்ற உறுப்பினர்கள் பேசியதை தொடர்ந்து முதலமைச்சர் ரங்கசாமி இன்று பதில் அளித்தார். அப்போது அவர் அரசு ஏற்கனவே அரசு பேருந்துகளில் ஆதிதிராவிட பெண்கள் இலவசமாக பயணிக்கலாம் என்று அறிவிப்பை வெளியிட்டது. இதனை அனைத்து மகளிர்க்கும் நீட்டிக்க வேண்டும் என்று சட்டமன்ற உறுப்பினர்கள் கேட்டுக் கொண்டதால் அனைத்தும் அனைத்து மகளிரும் அரசு பேருந்துகளில் இனி இலவசமாக பயணிக்கலாம் என அறிவித்தார்.
விதவை தாய்மார்களுக்கு மாதம் தோறும் 2000 ரூபாய் வழங்கப்படும் உதவித்தொகை 3000 ரூபாயாக உயர்த்தப்படுவதாக முதலமைச்சர் அறிவித்தார்.
சேதராப்பட்டில் உள்ள 800 ஏக்கர் நிலத்தில் மருத்துவ பூங்கா மற்றும் தொழிற்சாலைகள் துவங்கப்பட்டு இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும் என்றும் அறிவித்தார்.
ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்கள் மட்டுமே பயன்பெற்று வருவதால் அனைத்து மக்களும் பயன்பெறும் மாநில சுகாதாரத் திட்டம் செயல்படுத்தப்படும் என தெரிவித்தார்.
அனைத்து குடும்ப அட்டைதார்களுக்கும் ஆயுள் காப்பீட்டு திட்டம் செயல்பாட்டுக்கு கொண்டுவரப்படும் என்ற அறிவித்த முதல்வர், புதுச்சேரியில் மூடப்பட்டுள்ள பஞ்சாலைகளில் பணிபுரிந்த தொழிலாளர்களுக்கு சேர வேண்டிய நிதி வழங்கப்பட்ட பிறகு அந்த பஞ்சாலைகள் இடத்தில் வேறு தொழில்களை துவங்குவது குறித்து அரசு நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். மேலும், மூடப்பட்டுள்ள அரசு கூட்டுறவு சர்க்கரை ஆலை தனியார் பங்களிப்புடன் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், காரைக்கால் மாவட்டத்தில் கடந்த மாதம் திடீரென்று பெய்த மழை காரணமாக பாதிக்கபட்டுள்ள விவசாயிகளுக்கு ஹெக்டேர் ஒன்றுக்கு ரூ. 7500 இழப்பீடாக வழங்கப்படும் எனவும் கூறினார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Govt Bus, Puducherry, Puthucherry cm