முகப்பு /புதுச்சேரி /

சென்னை புதுவை இடையே தொடங்கிய கடல் போக்குவரத்து..

சென்னை புதுவை இடையே தொடங்கிய கடல் போக்குவரத்து..

X
சென்னை

சென்னை புதுவை இடையே தொடங்கிய கடல் போக்குவரத்து

Puducherry News : சென்னை புதுச்சேரிக்குமிடையே கடல்வழி சரக்கு போக்குவரத்து தொடங்கிய நிலையில் சென்னை துறைமுகத்தில் இருந்து கண்டெய்னர்களை ஏற்றிக்கொண்டு முதல் சரக்கு கப்பல் புதுச்சேரிக்கு வந்தடைந்தது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Puducherry (Pondicherry), India

சென்னை துறைமுகத்தில் இடநெருக்கடியை தவிர்க்க புதுச்சேரி துறைமுகத்தை துணை துறைமுகமாக செயல்பட ஒப்பந்தம் இடப்பட்டது. அதன்படி மத்திய அரசின் சாகர்மாலா திட்டத்தின்படி புதுச்சேரி துறைமுகம் ரூ.40 கோடி செலவில் ஆழப்படுத்தப்படும் பணிகள் தீவிரமாக நடைபெற்றது. கடந்த 15 நாட்களுக்கு மேலாக கேரளாவில் இருந்து வந்த கப்பல் தனது ஆய்வு பணியை முடித்துக் கொண்டு கண்டெய்னர்களை கொண்டு வருவதற்காக கடந்த 26ம் தேதி சென்னை துறைமுகம் வந்தது.

பின்னர் சென்னை துறைமுகத்தில் இருந்து கண்டெய்னர்களை ஏற்றிக்கொண்டு முதல் கப்பல் புதுச்சேரி துறைமுகத்திற்கு வந்தது. இதைத்தொடர்ந்து புதுச்சேரி மற்றும் தமிழகத்தின் தென் மாவட்டங்களில் இருந்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யக்கூடிய பொருட்கள் புதுச்சேரி துறைமுகத்திற்கு கொண்டுவரப்பட்டு இங்கு அமைக்கப்பட்டுள்ள சுங்கத்துறை ஆய்வுக்கு பிறகு ஏற்றுமதிக்கான ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டு இங்கிருந்து சென்னை துறைமுகத்திற்கு கொண்டு செல்லப்படும்.

தொடர்ந்து, அங்கிருந்து நடுக்கடலில் வெளிநாடுகளுக்கு செல்லக்கூடிய பெரிய கப்பலில் ஏற்றப்படுகிறது. இதன் மூலம் சென்னை துறைமுகத்தில் இடநெருக்கடி உள்ளிட்ட கூடுதல் சுமை குறையும். மேலும் சென்னையில் இருந்து புதுச்சேரிக்கு கடல்வழியாக சரக்குகளை கொண்டு வருவதால் சாலை போக்குவரத்து நெரிசல் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் புதுச்சேரி துறைமுகத்தில் கண்டெய்னர்களை கையாளும் பணி அதிகம் நடைபெறும் பட்சத்தில் மறைமுகமாக வேலைவாய்ப்பு அதிகரிக்கவும் வாய்ப்புள்ளது என புதுச்சேரி அரசு நம்புகிறது.

First published:

Tags: Local News, Puducherry