அட்டை பூச்சி தெரபி என்பது அட்டை பூச்சிக்களை கொண்டு நம் ரத்தத்தில் கலந்துள்ள தேவையற்ற நஞ்சை உரியச் செய்யும் ஒருமருத்துவ முறையாகும். அட்டைப்பூச்சியை கொண்டு வைத்தியம் செய்வது பண்டைய காலத்தில் இருந்தே பழக்கத்தில் இருந்த ஒன்று. அவ்வளவு ஏன் மருத்துவ கடவுள், ஆயுர்வேத மருந்துகளின் அதிபதி என்ற நாம் போற்றும் கற்பனைக்கு எட்டாத அழகுடன் கையில் சங்கு, சக்கரம், அமிர்தகலசம் மற்றும் அட்டைப்பூச்சி ஆகியவற்றை ஏந்தி நிற்கும் திருமாலின் அவதாரமான தன்வந்திரியும் அட்டைப்பூச்சியின் முக்கியத்துவத்தை உணர்த்துகிறார்.
19 ஆம் நூற்றாண்டில் இந்த வைத்தியம் பிரபலமாக பரவியிருந்தது. 20 ஆம் நூற்றாண்டில் மெதுவாக நவீன மருத்துவங்கள் வளர்ச்சியடைந்ததும், இந்த அட்டை தெரபி நலிவடைந்தது.எனினும் 1960 பிறகு சில பகுதிகளில் இந்த அட்டை பூச்சி தெரபியை மீண்டும் ஆரம்பிக்க துவங்கினர். பல்வேறு நோய்களுக்கு அட்டைப்பூச்சி மருத்துவம் தீர்வாக அமைந்துள்ளது என்றும் அதற்கு ஹிருடோதெரபி என்று பெயரிடப்பட்டுள்ளதாகசித்த மருத்துவர் ஹேமலதா தெரிவித்தார்.
புதுவை கடற்கரையில் சித்த மருத்துவங்கள் குறித்து சிறப்பு கண்காட்சி நடத்தப்பட்டது. அதில் அட்டைப் பூச்சி தெரபி என தனி கூடாரம் அமைக்கப்பட்டு பொதுமக்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இது குறித்து சித்த மருத்துவரிடம் கேட்ட பொழுது “பாதிக்கப்பட்ட இடங்களில் அட்டைப் பூச்சிகளை நேரடியாக விட்டுவிடுவார்கள். இவை இதய நோய்களுக்கு, இரத்தக் கட்டிகளை கரைப்பதற்கு, முகப்பரு, சொட்டை முடியில் முடி வளர என பல்வெறு நோய்களுக்கு பயன்படுத்தப்படுகிறது. அட்டைப்பூச்சியின் எச்சில் இரத்தத்தின் அடர்த்தியை குறைக்கிறது.
ஆறாத காயங்களை குணப்படுத்துகிறது. முக்கியமாக அறுவை சிகிச்சைக்கு பின் உண்டாகும் ரணங்களை வெகுவிரைவில் ஆற்றுகிறது. உடலில் செல்லிறப்பு அதிகமாக இருந்தால், அல்லது ரத்த ஓட்டம் குறைவாக இருக்கும்போது, இந்த அட்டைப் பூச்சிகள் அவைகளுக்கு தூண்டுதல் அளித்து, வேகமாக செயல்பட வைக்கிறது. ஒரு நோயாளிகளுக்கு அரை மணி நேரம் இந்த அட்டைப்பூச்சி பாதிக்கப்பட்ட இடத்தில் விடப்படும் தொடர்ந்து அரை மணி நேரத்திற்குள் அட்டைப்பூச்சி தானாகவே விழுந்து விடும் அவ்வாறு விழவில்லை என்றால் மஞ்சள் பொடி தூவி அதை அப்புறப்படுத்துவோம். தொடர்ந்து விடுபட்ட அட்டைப் பூச்சியை சுத்தம் செய்த பின்பு தான் மற்றொரு நோயாளிகளுக்கு பயன்படுத்தப்படும் என்று சித்தமருத்துவர் தெரிவித்தார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Puducherry