புதுச்சேரி வைத்திக்குப்பம் கடற்கரையில் நடைபெற்ற மாசிமக தீர்த்தவாரியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
ஒவ்வொரு ஆண்டும் மாசி மகம் திருவிழா நடைபெறும் போது வைத்திக்குப்பம் கடற்கரையில் புதுச்சேரி மட்டுமில்லாது தமிழகத்தைச் சேர்ந்த ஏராளமான கோயில்களில் உள்ள உற்சவர்களை கடற்கரையில் கொண்டு வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருவார்கள்.ஒரே இடத்தில் பல நூறு உற்சவர்கள் அருள்பாலிப்பதால் ஆயிரக்கணக்கில் பக்தர்கள் மாசி மகத்திற்கு தங்கள் குடும்பத்துடன் வந்து சாமி தரிசனம் செய்வது வழக்கம்.
அந்த வகையில் 121-ஆம் ஆண்டு மாசி மக பெருவிழா வைத்திக்குப்பம் கடற்கரையில் நடைபெற்றது. மாசி மகம் தீர்த்தவாரி யொட்டி வைத்திக்குப்பம் கடற்கரையில் மயிலம் முருகன்,தீவனூர் விநாயகர்,செஞ்சி ரங்கநாதர், மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி, அதேபோல் புதுச்சேரி பகுதியில் இருந்து மணக்குள விநாயகர், வரதராஜ பெருமாள், வேதபுரீஸ்வரர், முத்தியால்பேட்டை லட்சுமி ஹயக்ரீவர், உட்பட புதுச்சேரி பகுதியில் இருந்து 100க்கும் மேற்பட்ட கோயில்களில் இருந்து உற்சவர்கள் ஊர்வலமாக அழைத்து வந்து வழிபாடு நடத்தினர்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
இதனையொட்டி மாசி மகம் தீர்த்தவாரி பெருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் பாதுகாப்புக்காக சாமி தரிசனம் செய்ய அனைத்து ஏற்பாடுகளையும் மாவட்ட நிர்வாகம் செய்துள்ளது. கோவில் உற்சவர்கள் நிற்கும் இடத்திற்கு பந்தல் அமைப்பது, சாமி தரிசனம் செய்ய வந்த பொதுமக்கள் கடற்கரையில் இறங்காத வகையில் தடுப்புகள் அமைப்பது உள்ளிட்ட பல பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
மேலும் அசம்பாவித சம்பவங்கள் ஏதும் நடைபெறாமல் இருக்கவும், திருட்டு சம்பவங்களை தடுக்கவும், போலீஸ் தரப்பில் கண்காணிப்பை தீவிரப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு இருக்கிறது. விழாவிற்கு வரும் பொதுமக்களுக்கு அத்தியாவசிய தேவையான குடிநீர் வசதி, கழிப்பறை வசதி மற்றும் சிசிடிவி கண்காணிப்பு கேமரா ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Puducherry