முகப்பு /புதுச்சேரி /

புதுவை பாரதி பூங்காவின் 4 வாசல்களையும் திறக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை

புதுவை பாரதி பூங்காவின் 4 வாசல்களையும் திறக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை

X
புதுவை

புதுவை பாரதி பூங்கா

Puducherry Barathi Park : புதுச்சேரி பாரதி பூங்காவில் ஒரு வழி மட்டும் திறந்துள்ளதால் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Puducherry (Pondicherry), India

புதுச்சேரி சட்டசபை மற்றும் கவர்னர் மாளிகை மையப்பகுதியில் பாரதி பூங்கா அமைந்துள்ளது. பூங்காவிற்கு தினமும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இந்த பூங்காவிற்கு 4 வழிகள் உள்ளன. அதில் சட்டசபை, கவர்னர் மாளிகை மற்றும் வணிகவியல் அலுவலகம் எதிரில் உள்ள நுழைவு வாயில்கள் பூட்டப்பட்டுள்ளது. கடற்கரை சாலை நேரு சிலை எதிரே உள்ள நுழைவு வாயில் மட்டுமே திறக்கப்பட்டுள்ளது. இந்த வழியாகத்தான் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் பூங்காவிற்கு சென்று வர வேண்டியள்ளது.

வணிகவியல் அலுவலகம் எதிரே உள்ள நுழைவு வாயில் அருகில் நகராட்சியினர் குப்பை தொட்டிகளை வைத்துள்ளனர். அங்கு குப்பைகள் சிதறி கிடப்பதால் பூங்காவிற்கு வருபவர்கள் முகம் சுளிப்புடன் சென்று வருகின்றனர். பூங்காவில் ஒரு வழி மட்டும் திறந்துள்ளதால், விடுமுறை மற்றும் பண்டிகை காலங்களில் குழந்தைகளை அழைத்து கொண்டு பொதுமக்கள் அதிக துாரம் சுற்றி அவதிப்பட்டு வருகின்றனர். எனவே, பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளின் சிரமத்தை கருத்தில் கொண்டு பூங்காவின் 4 நுழைவுவாயில்களையும் திறக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.

First published:

Tags: Local News, Puducherry