புதுச்சேரி ஆரோவில் 55ம் ஆண்டு உதய தினத்தை முன்னிட்டு பொதுமக்கள் சிறப்பாக விழாவை கொண்டாடி மகிழ்ந்தனர்.
புதுச்சேரி அடுத்த தமிழக பகுதியான ஆரோவில் சர்வதேச நகரம் அமைந்துள்ளது. இந்த நகரத்தை உருவாக்க அன்னை மிரா அல்பாசா தலைமையில் 1968ம் ஆண்டு பிப்ரவரி 28ல் கட்டுமானப் பணிகள் துவங்கியது. யுனெஸ்கோ அமைப்பு இந்த நகரம் எதிர்கால மனித சமுதாயத்திற்கு ஒரு முக்கியமானதாக அமையும் என பாராட்டி ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றி, இதற்கு தனது முழு ஆதரவையும் அளித்தது.
வேற்றுமையில் மனித இன ஒற்றுமையை உருவாக்குவதே ஆரோவில்லின் நோக்கம் ஆகும். இன்றைக்கு ஆரோவில் மட்டுமே சர்வதேச அளவில் மனித இன ஒற்றுமை, ஜீவியத்தின் திருவுருமாற்றம் ஆகியவற்றின் பரிசோதனைக்கு உரிய முதல் மற்றும் ஒரே நகரமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
மேலும் நிலையான வாழ்வு, எதிர்கால மனித குலத்திற்கு தேவையான பண்பாட்டு, சுற்றுச்சூழல், சமூக, ஆன்மீக தேவைகள் ஆகியவற்றில் அக்கறையுடன் நடை முறையில் ஆராய்ச்சி செய்து வருகிறது. சுமார் 52 க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து மக்கள் வந்துள்ளனர். அனைத்து சமூக, பண்பாட்டு பின்னணிகளை இவர்கள் கொண்டுள்ளனர். இந்த நகரத்தின் மக்கள் தொகை தொடர்ந்து வளர்ச்சி பெற்று வருகிறது.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
தற்போது சுமார் 2500 பேர் ஆரோவில் உள்ளனர். இதில் இந்தியர் சுமார் மூன்றில் ஒரு பகுதியினர் ஆவார்.இவ்வளவு சிறப்புகளை கொண்ட ஒரே சர்வதேச நகரம் உருவாகிய தினத்தை ஆண்டுதோறும் ”ஆரோவில் உதய தினம்” என்று ஆரோவில் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.
55ம் ஆண்டு உதய தினத்தை முன்னிட்டு அதிகாலை ஆரோவில் ஆம்பிதியேட்டரில் போன் பயருடன் கூட்டு தியானம் நடைபெற்றது. இதில் ஏராளமான வெளிநாட்டினர் மற்றும் உள்ளூர் வாசிகள் கலந்து கொண்டு உலக அமைதி வேண்டி கூட்டு தியானத்தில் ஈடுபட்டனர். மேலும் ஆரோவில் முழுவதும் உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Puducherry