முகப்பு /புதுச்சேரி /

புதுவையில் 1,000 மாணவர்கள் தொடர்ச்சியாக 30 நிமிடங்கள் சிலம்பம் சுற்றி சாதனை!

புதுவையில் 1,000 மாணவர்கள் தொடர்ச்சியாக 30 நிமிடங்கள் சிலம்பம் சுற்றி சாதனை!

X
சிலம்பம்

சிலம்பம் சுற்றி அசத்திய மாணவர்கள்

Pondicherry Silambam Event | புதுச்சேரி கடற்கரை சாலையில் நடைபெற்ற உலக சாதனை படைக்கும் நிகழ்ச்சியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டு தொடர்ச்சியாக 30 நிமிடங்கள்  சிலம்பம் சுற்றி அசத்தினர்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Puducherry (Pondicherry) | Puducherry (Pondicherry)

புதுச்சேரி ஒருங்கிணைந்த சிலம்பாட்ட கழகம் சார்பில் புதுச்சேரி கடற்கரை உலக சாதனை படைக்கும் முயற்சிக்கான ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதன்படி புதுச்சேரியில் உள்ள பல்வேறு பள்ளிகளை சேர்ந்த 1,200 க்கும் மேற்பட்ட சிலம்பம் பயிற்சி பெற்ற மாணவர்கள் ஒன்று சேர்ந்து கடற்கரை சாலையில் அணிவகுத்தபடி 30 நிமிடங்கள் தொடர்ச்சியாக சிலம்பம் சுற்றி உலக சாதனை படைக்கும் நிகழ்ச்சியில் ஈடுபட்டனர்.

நிகழ்ச்சியை சட்டமன்ற எதிர்கட்சி தலைவர் இரா.சிவா தொடங்கி வைத்தார். தமிழர்களின் பாரம்பரிய கலையான சிலம்பம் சுற்றும் கலையை மாணவர்கள் கற்றுக்கொள்ள வேண்டும்.

குறிப்பாக மாணவிகள் இதை தற்காப்பு கலையாக பயில வேண்டும் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக சிலம்பாட்ட குழுவினர் ஏற்பாடு செய்த இந்த நிகழ்ச்சியில் சிறுவர், சிறுமிகள் பல்வேறு வகையில் விதவிதமான சிலம்பத்தை சுற்றி அசத்தியது கடற்கரைக்கு வந்த பொதுமக்களை வெகுவாக கவர்ந்தது.

First published:

Tags: Local News, Puducherry, World record