முகப்பு /புதுச்சேரி /

+2 தேர்வு முடிவுகள் வெளியீடு : புதுச்சேரி, காரைக்கால் 92.67% பேர் தேர்ச்சி

+2 தேர்வு முடிவுகள் வெளியீடு : புதுச்சேரி, காரைக்கால் 92.67% பேர் தேர்ச்சி

 பிளஸ் 2 தேர்வு முடிவு

பிளஸ் 2 தேர்வு முடிவு

இன்று 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு  முடிவு வெளியாது. இதில் புதுச்சேரி மற்றும் காரைக்கால் 92.67% பேர் தேர்ச்சி பெற்றனர்.

  • Last Updated :
  • Puducherry (Pondicherry), India

புதுச்சேரியின் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு  முடிவுகளை முதல்வர் ரங்கசாமி வெளியிட்டார். 

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பிளஸ் டூ தேர்வுகள் கடந்த மார்ச் 13-ம் தேதி தொடங்கி, ஏப்ரல் 3-ம் தேதிவரை நடைபெற்றன. இதில், 8,51,000 பேர் கலந்துகொண்டனர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக்செய்க

விடைத்தாள் திருத்தும் பணிகள் நிறைவடைந்த நிலையில், தேர்வு முடிவுகளை புதுச்சேரிஉள்ள சட்டசபையில் உள்ள முதலமைச்சராக அலுவலகத்தில் இன்று காலை  முதலமைச்சர் ரங்கசாமி வெளியிட்டார்.  அப்போது அவர் பேசுகையில், ” கடந்த மார்ச் மாதம் நடந்த பிளஸ் 2 பொதுத்தேர்வில் புதுச்சேரி, காரைக்காலை சேர்ந்த 6,682 மாணவர்களும் 7, 542  மாணவிகளும் என மொத்தம் 14, 224 பேர் தேர்வு எழுதினர். இதில் அரசு, தனியார் பள்ளிகளை சேர்ந்த 6,000 மாணவர்கள் 7,182 மாணவிகள் என மொத்தம் 13 ,182 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளதாக தெரிவித்தார்.

அதேநேரம் புதுச்சேரியில் உள்ள அரசு பள்ளி மாணவர்களில் 85.88 சதவீதம், காரைக்காலில் 83.66 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்” என்றும் அவர் கூறினார்.

top videos
    First published:

    Tags: Local News, Puducherry