முகப்பு /செய்தி /புதுச்சேரி / 12ம் வகுப்பு பொதுத் தேர்வு... புதுவையில் முதலிடம் பிடித்த சமையல் கலைஞரின் மகள்..!

12ம் வகுப்பு பொதுத் தேர்வு... புதுவையில் முதலிடம் பிடித்த சமையல் கலைஞரின் மகள்..!

புதுச்சேரி 12ம் வகுப்பு பொதுத் தேர்வு

புதுச்சேரி 12ம் வகுப்பு பொதுத் தேர்வு

மாணவி மிஜினா 600க்கு 580 மதிப்பெண்கள் பெற்று புதுவை அரசு பள்ளி மாணவர்களில் முதல் மாணவராக தேர்ச்சிப் பெற்றுள்ளார்.

  • Last Updated :
  • Puducherry (Pondicherry), India

புதுச்சேரியில் +2 தேர்வில் அரசு பள்ளிகளில் முதலிடத்தை மாணவி மிஜினா பெற்றுள்ளார். இவரது தந்தை ஜின்னா சமையல்காரராக பணிபுரிந்து வருகிறார். ஏழை குடும்பத்தை சேர்ந்த மிஜினா அரசு பள்ளியில் துவக்கத்தில் இருந்து படித்து அரசு உதவிகளை பெற்று முதலிடம் பெற்றுள்ளார். இதுகுறித்து மகிழ்ச்சி தெரிவித்த மிஜினா, " அரசு பள்ளி என்னை உருவாக்கியது போல நானும் ஆசிரியருக்கு படித்து பல மாணவர்களை உருவாக்க வேண்டும் என்ற எண்ணத்தில் பி.ஏ தமிழ் படிக்க உள்ளதாக கூறுகிறார்.

இதையும் வாசிக்கஅனைத்து பாடங்களிலும் முழு மதிப்பெண்... 600/600 மதிப்பெண் பெற்று சாதித்த தச்சுத் தொழிலாளி மகள்

மாணவி மிஜினா, 600 மதிப்பெண்களுக்கு 580 மதிப்பெண்கள் புதுவையின் முதல் மாணவராக தேர்ச்சிப் பெற்றுள்ளார். இதில், கணக்கு, வணிகவியல், கனக்கு பதிவியல் ஆகிய பாடங்களில் 100க்கு 100 மதிப்பெண் என்பது குறிப்பிடத்தக்கது. 

top videos

    கடந்த மார்ச் மாதம் நடந்த 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் புதுச்சேரி, காரைக்காலை சேர்ந்த 6,682 மாணவர்களும் 7, 542 மாணவிகளும் என மொத்தம் 14, 224 பேர் தேர்வு எழுதினர். இதில் 6,000 மாணவர்கள் 7,182 மாணவிகள் என மொத்தம் 13 ,182 மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர். தேர்ச்சி விகிதம் 92.67% ஆகும்.

    First published:

    Tags: 12th Exam results, Puducherry