முகப்பு /புதுச்சேரி /

புதுச்சேரியில் போக்குவரத்து இடையூறாக உள்ள தூங்குமூஞ்சி மரம்!

புதுச்சேரியில் போக்குவரத்து இடையூறாக உள்ள தூங்குமூஞ்சி மரம்!

X
மரம்

மரம்

போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள மரத்தை அகற்றாததால் "அறிவாளி மரம்" "அதிசய மரம்" என்று மரத்தில் எழுதியுள்ளனர்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Puducherry (Pondicherry) | Puducherry (Pondicherry)

புதுச்சேரி அண்ணா சாலை பெருமாள் கோவில் வீதி சந்திப்பு பகுதியில் தூங்கு மூஞ்சி மரம் ஒன்று சாலையோரம் சாய்ந்து ஆபத்தான நிலையில் உள்ளது.

இந்த பகுதியில் செல்பவர்களுக்கு இந்த மரம் இடையூறாக அமைந்துள்ளது. இந்த மரத்தில் துணிகள், மலர் மாலைகள் மற்றும் ஜரிகை தோரணங்கள் கட்டப்பட்டுள்ளது.  மேலும் அதில் அறிவாளி மரம், அதிசய மரம் என்று எழுதி வைக்கப்பட்டுள்ளது. இந்த வழியாக செல்லும் மக்கள் அந்த மரத்தை ஆச்சரியத்துடன் பார்த்து செல்கின்றனர்.

இந்த மரத்தால் பாதிக்கப்பட்ட புத்தக கடை உரிமையாளர் ராமானுஜம் என்பவர் தான் இந்த வாசகத்தை எழுதி மரத்தில் வைத்துள்ளார்.இந்த மரம் சாய்ந்த நிலையில் இருப்பதால் எந்த நேரத்தில் சரிந்து விழுந்து ஆபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. இதனால் அவர் பலமுறை வனத்துறை, பொதுப்பணித்துறை என பலரிடமும் புகார் அளித்தார்.

ஆனால், அவர்கள் எந்த வித நடவடிக்கையும் எடுக்காததால், இவர் இந்த வித்தியாச முயற்சியில் ஈடுபட்டுள்ளார். இதனை பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து செல்கின்றனர். அப்படியாவது இந்த மரத்தின் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா என அந்த புத்தக கடை உரிமையாளர் எதிர்பார்த்து காத்து கொண்டிருக்கிறார்.

First published:

Tags: Local News, Puducherry, Tree plant