முகப்பு /புதுச்சேரி /

புதுச்சேரி பெருமாள் கோயில் விவகாரம் : திருப்பதி தேவஸ்தானத்திற்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம்!

புதுச்சேரி பெருமாள் கோயில் விவகாரம் : திருப்பதி தேவஸ்தானத்திற்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம்!

X
கோயிலை

கோயிலை சீரமைக்க கோரி ஆர்ப்பாட்டம்

புதுச்சேரி பெருமாள் கோயிலில் புதுச்சேரி மட்டுமின்றி தமிழக பகுதிகளை சேர்ந்த பெருமாள் பக்தர்கள் வாரந்தோறும் சனிக்கிழமைகளில் வந்து பெருமாளை வழிபட்டுச் செல்வது வழக்கம்.

  • Last Updated :
  • Puducherry (Pondicherry), India

திருப்பதி தேவஸ்தானம், புதுச்சேரியில் இடிந்துள்ள பெருமாள் கோயிலை கட்ட எதிர்ப்பு தெரிவிக்கும் ஆந்திர முதலமைச்சரை கண்டித்து  ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

புதுச்சேரி நேரு வீதியில் பழமையான திருப்பதி தேவஸ்தான கோயில் இருந்தது. இந்த கோயிலில் புதுச்சேரி மட்டுமின்றி தமிழக பகுதிகளை சேர்ந்த பெருமாள் பக்தர்கள் வாரந்தோறும் சனிக்கிழமைகளில் வந்து பெருமாளை வழிபட்டுச் செல்வது வழக்கம்.

இந்த கோயில் கடந்த 12 வருடமாக இடிந்த நிலையில் காணப்படுகிறது. இதனால் புதுச்சேரியில் பெருமாள் பக்தர்கள் தரிசனம் செய்ய முடியாமல் வேதனை அடைந்து உள்ளனர். எனவே, புதுச்சேரி மக்கள் திருப்பதி தேவஸ்தானத்தில் 12 வருடமாக புகார் செய்தும் புதிய கோயில் கட்டவில்லை என்று சொல்லப்படுகிறது.

இந்நிலையில், புதுச்சேரி அரசு புதிய கோயில் கட்ட வழங்கிய அனுமதியை ஆந்திர அரசுக்கு அளித்தும், ஆந்திரா அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்த நிலையில் புதுச்சேரியில் திருப்பதி தேவஸ்தானம் கட்ட நடவடிக்கை எடுக்காத ஆந்திர முதல்வரை கண்டித்து புதுச்சேரி திருக்கோயில்கள் பாதுகாப்பு கமிட்டி சார்பில் பெருமாள் பக்தர்கள் ராஜா திரையரங்கம் அருகே கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தின்போது பெருமாள் பக்தர்கள் சாலையில் தேங்காய் உடைத்தும் மேள தாளங்கள் முழங்க, சாலையில் அமர்ந்து பஜனைகள் பாடி தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர்.

இதுகுறித்து திருக்கோயில் பாதுகாப்பு கமிட்டி நிர்வாகி கூறும்போது, "புதுச்சேரியில் இருந்த திருப்பதி தேவஸ்தானம் இடிந்து 12 வருடங்கள் ஆகிறது. ஆனால் புதிய கோயில் கட்ட அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக்செய்க

இது சம்பந்தமாக ஆந்திர அரசுக்கு கோரிக்கை விடுத்தும் அவர்களும் இதை கண்டு கொள்ளவில்லை. எனவே ஆந்திர முதல்வரை கண்டித்து இந்த போராட்டங்கள் நடத்தப்படுவதாக தெரிவித்தனர்.

top videos

    மேலும், புதிய கோயில் கட்டாமல் பெருமாள் பக்தர்கள் பெருமாளை தரிசிக்க முடியாமல் மன வேதனை உள்ளனர். இதனை புரிந்து கொண்டு புதிய கோயில் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.

    First published:

    Tags: Local News, Puducherry