கடல்வாழ் உயிரினங்களில் அழிவின் விளிம்பில் ஆலிவ் ரெட்லி ஆமைகள் இருக்கின்றன. இந்த ஆமைகள் எந்த இடத்தில் பிறக்கின்றனவோ அங்கேதான் வந்து முட்டைகளை இடும். இந்தியாவை பொறுத்தவரை தமிழகம் மற்றும் புதுவை கடற்கரையில் இவை முட்டையிடும். அப்படி முட்டையிட வரும் ஆமைகள் இழுவை மீன்பிடி படகுகளில் சிக்கி சில சமயங்களில் இறக்க நேரிடுகிறது. அதேபோல் மீன்பிடி படகுகளின் மோட்டார்களில் இருந்து வரும் சத்தத்தினாலும் இந்த ஆமைகள் பாதிக்கப்படுவதாகவும் இதனால் அவை இறப்பதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், காரைக்கால் கடற்கரையில் மக்கள் பொழுதுபோக்குக்காக பயன்படுத்தும் பகுதிகள், மீனவர் குடியிருப்பு பகுதிகள் மற்றும் அலையாத்தி காடு ஆகிய பகுதிகளில் கடல் ஆமைகள் உயிரிழந்து கரை ஒதுங்கிடப்பதாகவும். அதை முறையாக அகற்றாததால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதாக மீனவர்கள் குற்றம்சாட்டுகின்றனர். மேலும், காரைக்கால் கடற்கரையில் மட்டும் 10க்கும் மேற்பட்ட ஆமைகள் இறந்த நிலையில் கரை ஒதுங்கி கிடக்கின்றன.
குறிப்பாக அவை ஆலிவ் ரிட்லி வகையை சேர்ந்த ஆமைகளாகவே இருக்கிறது. பொதுவாக பருவமழை கால முடிவின்போது ஆமைகள் கரைக்கு வந்து பள்ளம் தோண்டி முட்டையிடும். அடிக்கடி வந்து அதை பார்த்து செல்லும். இந்த வகையில் இவை கடற்கரை பகுதியில் வாழ்விடமாக கொண்டுள்ளபோது காரைக்கால் பகுதியில் விசைப்படகுகள் போக்குவரத்து அதிகமாக இருப்பதால் படகின் கீழ் பகுதியில் அடிபட்டு ஆமை உயிரிழக்க நேரிடலாம் என்று இயற்கை ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். மேலும் இறந்த ஆமைகளை உடனே அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தால் கடற்கரைப்பகுதி தூய்மையாக வைத்திருக்க முடியும் என்று அப்பகுதி மக்கள் மற்றும் மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Puducherry