நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள வாழ்மங்கலம் பகுதியை சேர்ந்த மூதாட்டி காமாட்சி கணபதி. இவரது கணவர் கணபதி இந்திய சுதந்திர போராட்டத்தில் சுபாஷ் சந்திரபோஸ் அவரோடு இணைந்து இந்திய ராணுவத்தில் பணியாற்றியவர்.
இந்த நிலையில் சுதந்திரப் போராட்ட வீரர் கணபதி கடந்த 2011 ஆம் ஆண்டு மறைந்தார். இவருக்கு மத்திய மற்றும் தமிழ்நாடு அரசு சார்பில் பல்வேறு விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. காமாட்சி கணபதி தற்போது புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டத்தில் அவரது மகள் வீட்டில் வசித்து வருகிறார்.
இவருக்கு நான்கு மகள்கள் உள்ளனர். இந்த நிலையில் அந்த பாட்டிக்கு 100 வயது ஆனது ஒட்டி குடும்பத்தார் மற்றும் ஊர் மக்கள் இணைந்து பூர்ணாபிஷேக விழாவை காரைக்காலை அடுத்த திருப்பட்டினத்தில் உள்ள அபிராமி அம்மன் கோவில் அருகே நடத்தினர்.
இந்த விழாவில், ஊர் மக்கள் இணைந்து காமாட்சி பாட்டிக்கு பிறந்தநாள் கேக் வெட்டி கொண்டாடி அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர். இதில், நாகை மற்றும் காரைக்கால் மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் தொகுதி சட்டமன்ற உறுப்பினர்கள், புதுச்சேரி போக்குவரத்து துறை அமைச்சர் சந்திர பிரியங்கா மற்றும் ஊர் மக்கள் கலந்து கொண்டு பாட்டியிடம் ஆசீர்வாதம் பெற்றனர்.
இந்த நிலையில் காமாட்சி பாட்டிக்கு பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் கடிதம் வாயிலாக பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, PM Modi, Prime Minister Narendra Modi, Puducherry