முகப்பு /புதுச்சேரி /

மதுபானி ஓவியக்கலையில் புதுச்சேரி கர்ப்பிணி ஓவியர் வரைந்த அசத்தலான ஓவியம்!

மதுபானி ஓவியக்கலையில் புதுச்சேரி கர்ப்பிணி ஓவியர் வரைந்த அசத்தலான ஓவியம்!

X
மதுபானி

மதுபானி ஓவியக்கலையில் புதுச்சேரி கர்ப்பிணி ஓவியர் வரைந்த அசத்தலான ஓவியம்!

Puducherry News | புதுச்சேரி முத்தியால்பேட்டை பகுதியை சேர்ந்த ஓவியர் சோலை அபிராமி அழகான கர்ப்பிணி ஓவியத்தை பழமையான மதுபானி ஓவிய முறைப்படி வரைந்து அசத்தியுள்ளார்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Puducherry (Pondicherry), India

புதுச்சேரி முத்தியால்பேட்டை பகுதியை சேர்ந்தவர் ஓவியர் சோலை அபிராமி. இவர் புதுச்சேரியில் ஓவிய ஆசிரியராக பணியாற்று வருகிறார். மேலும் முக்கிய நிகழ்வுகள் அல்லது முக்கிய நாட்களின்போது. அந்த நாளின் சிறப்பை கூறும் விதமாக பெரிய அளவிலான ஓவியங்களாக தீட்டி வருவது வழக்கம். அந்த வகையில், மகளிர் தினத்தை முன்னிட்டு தனது இல்லத்தில் 9 அடி நீளம் 7 அடி அகலத்தில் மதுபானி ஓவியக்கலையை பயன்படுத்தி அழகான கர்ப்பிணி பெண் ஓவியத்தை வரைந்துள்ளார்.

இந்நிலையில், இந்த ஓவியத்தில் பூமாதேவி கர்ப்பிணி பெண்ணை தாங்குவது போலவும், பெண்களுக்கு முக்கியத்துவம் அளிப்பது போலவும் தீட்டப்பட்டுள்ளது. இதனை அப்பகுதியில் உள்ள மக்கள் வியந்து பார்த்து ஓவியரை பாராட்டி வருகின்றனர். இதில் சிறப்பு என்னவென்றால் இதை வரைந்த ஓவியர் அபிராமியும் தற்போது கர்ப்பமாக இருக்கிறார். இவர் இந்த நிலையிலும் அழகான மிகப்பெரிய ஓவியத்தை நுணுக்கமாக வரைந்து அனைவரின் பாராட்டையும் பெற்றுள்ளார்.

இதுகுறித்து பேசிய ஓவியர் சோலை அபிராமி, “தொடர்ந்து பல ஆண்டுகளாக வித்தியாசமான முறைகளில் ஓவியம் தீட்டி வருகிறேன். மகளிர் தினத்தை முன்னிட்டு பெண்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் வட மாநில கலாச்சார மதுபானி ஓவியம் வரைந்து உள்ளேன். மேலும் இடைவெளி இல்லாமல் வரையப்பட்ட ஓவியத்தை இந்தியன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் சாதனைக்கு அனுப்ப உள்ளேன்” என தெரிவித்தார்.

First published:

Tags: Local News, Puducherry