முகப்பு /புதுச்சேரி /

தமிழக வனத்துறை மீன்பிடிக்க அனுமதிக்க வேண்டும்: பூத்துறை கிராம சபையில் தீர்மானம் நிறைவேற்றம்

தமிழக வனத்துறை மீன்பிடிக்க அனுமதிக்க வேண்டும்: பூத்துறை கிராம சபையில் தீர்மானம் நிறைவேற்றம்

X
கிராமசபை

கிராமசபை கூட்டம்

Poothurai Grama sabahai kootam | கிராம சபை கூட்டத்தில் பள்ளி தலைமை ஆசிரியர், வார்டு உறுப்பினர்கள், மகளிர் சுய உதவி குழுவினர்கள், ஊராட்சி பணியாளர்கள், ஊர் பொதுமக்கள், இளைஞர்கள், முக்கியஸ்தர்கள் என திரளான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Puducherry (Pondicherry), India

தமிழக வனத்துறை மீன்பிடிக்க அனுமதிக்க வேண்டும் என பூத்துறை ஊராட்சி கிராம சபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

விழுப்புரம் மாவட்டம், வானூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட, பூத்துறை ஊராட்சியில் குடியரசு தின விழா சிறப்பு கிராமசபை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு ஊராட்சி மன்ற தலைவர் ஜெ. சேகர் தலைமை தாங்கினார். கிராம சபை கூட்டத்தில் பல்வேறு மக்கள் பிரச்சனைகள் விவாதிக்கப்பட்டன. குறிப்பாக பூத்துறை ஊராட்சியில் வசிக்கும் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள 30 குடும்பங்கள் தமிழக எல்லையில் மீன் பிடிப்பதால் வனத்துறை அவர்களை எச்சரித்ததாகவும் தெரிவித்தனர்.

வாழ்வாதாரத்திற்குவேறு வழி இல்லாததால் தான் தமிழக பகுதியில் மீன்பிடிக்க சென்றதாகவும் இதை கிராம சபை அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது. அதையடுத்து ஊராட்சி மன்ற தலைவர் சேகர் தலைமையில் மீன்பிடிக்க தமிழக வனத்துறை அனுமதிக்க வேண்டும் என்று கிராம சபை கூட்டத்தில் மக்கள் முன்னிலையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

நிகழ்ச்சியில் ஒன்றிய கவுன்சிலர் கல்பனா வேலு, துணை வட்டார வளர்ச்சி அலுவலர் மோகனா, ஊராட்சி செயலாளர் சாம்பசிவம், ஊராட்சி மன்ற துணைத் தலைவர் ஆதிலட்சுமி கோவிந்தராஜ் , பள்ளி தலைமை ஆசிரியர், வார்டு உறுப்பினர்கள், மகளிர் சுய உதவி குழுவினர்கள், ஊராட்சி பணியாளர்கள், ஊர் பொதுமக்கள், இளைஞர்கள், முக்கியஸ்தர்கள் என திரளான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

First published:

Tags: Local News, Puducherry