முகப்பு /புதுச்சேரி /

பொன்னியின் செல்வன் 2 படம் பார்க்க வந்தவர்களுக்கு காலை உணவு வழங்கிய புதுச்சேரி கார்த்தி ரசிகர்கள்!

பொன்னியின் செல்வன் 2 படம் பார்க்க வந்தவர்களுக்கு காலை உணவு வழங்கிய புதுச்சேரி கார்த்தி ரசிகர்கள்!

X
பொன்னியின்

பொன்னியின் செல்வன் 2

Ponniyin Selvan 2 Release in Pondicherry : பொன்னியின் செல்வன் 2 திரைப்படம் வெளியானதயோட்டி கார்த்தி ரசிகர் மன்றம் சார்பாக காலை சிற்றுண்டி வழங்கி கொண்டாடினர்.

  • Last Updated :
  • Puducherry (Pondicherry), India

மணிரத்தினம் இயக்கத்தில் ஏர்.ஆர்.ரஹ்மான் இசையமைப்பில் உருவாகியுள்ள பொன்னின் செல்வன் திரைப்படத்தின் முதல் பாகம் உலகெங்கும் அமோக ஓடி வெற்றி அடைந்தது.

இதனையடுத்து, பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே பொன்னியின் செல்வன் 2ம் பாகம் வெளியாகியுள்ளது. இதனையொட்டி புதுச்சேரி மாநிலத்தில் உள்ள பெரும்பாலான திரையரங்குகளில் பொன்னின் செல்வன் 2 திரையிடப்படுகிறது. காலை முதல் காட்சியையொட்டி புதுவை மாநில கார்த்திக் ரசிகர் மன்றம் சார்பாக தியேட்டர் வாயில் முன்பு ரசிகர்கள் மற்றும் படம் பார்க்க வருபவர்களுக்கு காலை உணவு வழங்கப்பட்டது. தொடர்ந்து படத்தின் பேனருக்கு பூமாலை தூவி ரசிகர்கள் படத்தை வரவேற்றனர்.

காலை உணவு வழங்கிய புதுச்சேரி கார்த்தி ரசிகர்கள்

இந்த படத்தில், கார்த்தி வந்தியத் தேவனாக நடித்துள்ளார். ஜெயம் ரவி அருண்மொழி வர்மனாகவும், விக்ரம் ஆதித்த கரிகாலனாகவும் நடித்துள்ளனர். இதேபோல, த்ரிஷா குந்தவையாகவும், ஐஸ்வர்யா ராய் நந்தினியாகவும் நடித்துள்ளனர். இவ்வாறு பல்வேறு பிரபலங்கள் நடித்துள்ளதால், பல தரப்பு ரசிகர்களும் இந்த படத்தி கொண்டாடி வருகின்றனர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

top videos

    அதன்படி, வந்தியத் தேவனாக நடித்துள்ள கார்த்தி ரசிகர் மன்றம் சார்பாக காலை சிற்றுண்டி வழங்கி இந்த படத்தை கொண்டாடி வருகின்றனர்.

    First published:

    Tags: Actor Karthi, Cinema, Local News, Ponniyin selvan, Puducherry, Tamil Cinema