முகப்பு /புதுச்சேரி /

மணிலா விவசாயிகளுக்கு இலவசமாக நுண்ணூட்டச் சத்து கலவை!

மணிலா விவசாயிகளுக்கு இலவசமாக நுண்ணூட்டச் சத்து கலவை!

X
விவசாயிகள்

விவசாயிகள்

Puducherry | புதுவையில் வேர்க்கடலை சாகுபடியில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கு வேர்க்கடலை சாகுபடியில் தற்போது வந்துள்ள புதிய தொழில்நுட்பம் குறித்து ஆலோசனை வழங்கப்பட்டது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Puducherry (Pondicherry), India

புதுவையில் வேர்க்கடலை சாகுபடியில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்குவேர்க்கடலை சாகுபடியில் தற்போது வந்துள்ள புதிய தொழில்நுட்பம் குறித்து ஆலோசனை வழங்கப்பட்டது. நிகழ்ச்சியின் முடிவில் விவசாயிகளுக்கு இலவசமாக சத்து கலவை வழங்கப்பட்டது.

புதுச்சேரி வேளாண் மற்றும் விவசாய நலத்துறை சார்பில்மணிலா சாகுபடி செய்யும் விவசாயிகளை ஊக்குவிக்கும் வகையிலும்மகசூலை அதிகரிக்கவும், தொழில் நுட்பங்களை பயன்படுத்தவும் செயல் விளக்கம் ஏம்பலம் பகுதியில் விவசாய நிலத்தில் நடைபெற்றது. இந்த செயல் விளக்கத்திற்கு வேளாண் அலுவலர் தினகரன் கலந்துகொண்டு மணிலா சாகுபடியில் புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்தி அதிக மகசூல் பெறுவது எப்படி நுண்ணூட்டக் கலவையை எவ்வாறு எந்த விதத்தில் பயன்படுத்துவது என்பது குறித்து விவசாயிகளுக்கு செயல்விளக்கம் செய்து காண்பித்தார்.

முன்னதாக மருத்துவர் செல்வமுத்து விவசாயிகளை வரவேற்று பேசினார். இந்த செயல் விளக்கக் கூட்டத்திற்கு கிராம விரிவாக்க பணியாளர் கிருஷ்ணன் மற்றும் உதவியாளர் தம்புசாமி ஏற்பாடு செய்தனர். இந்த நிகழ்ச்சியில் 20க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டு பயன்பெற்றனர். இறுதியில் விவசாயிகள் அனைவருக்கும்நுண்ணூட்டச் சத்து கலவை 5 கிலோ இலவசமாக வழங்கப்பட்டது.

First published:

Tags: Agriculture, Local News, Puducherry