புதுச்சேரி அரசின் காரைக்கால் மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குனர் டாக்டர் சிவராஜ்குமார் புதுவை மக்களுக்கு வெயில் குறித்து எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், “கோடை வெயிலின் வெப்பம் வயதானவர்கள் குழந்தைகளை அதிகம் பாதிக்கும் எனவே வெயில் அதிகம் உள்ள காலை 10 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை முதியவர்களை அத்தியாவசியம் இருந்தால் மட்டுமே வெளியே அழைத்துச் செல்ல வேண்டும்.
அதுவும், மோட்டார் சைக்கிளை தவிர்த்து விட்டு கார் ஆட்டோ போன்ற வாகனங்களில் அழைத்துச் செல்ல வேண்டும். ஏனென்றால் வெப்பம் மூளையை தாக்கி செயல் இழப்பை ஏற்படுத்தும் கைக்குழந்தைகளை வெயிலில் வெளியில் அழைத்துச் செல்ல வேண்டாம்.
உடலில் நீர் சத்து குறைந்தால் வெளிக்காட்டுவது தான் தாகம் எனவே தாகம் எடுக்கும் போதெல்லாம் நல்ல தண்ணீரை குடியுங்கள் எலுமிச்சை சாறு மோர் நொங்கு இளநீர் பழச்சாறு உள்ளிட்டவைகளையும் குடிக்கலாம். காட்டன் முழுக்கை சட்டையும் அணிந்தால் வெப்பத்தை உடலில் இருந்து வெளியில் எடுக்கும். செயற்கை இலை சட்டைகளை வெப்பத்தை உடலையே தங்க வைக்கும்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
எனவே காட்டன் சட்டையை அணியுங்கள். வெளியில் செல்லும்போது மயக்கம் அடைந்தால் 108 அழைத்து குளுக்கோஸ் ஏற்றினால் சரியாகும் கோடை காலம் குறுகிய காலம் தான். தற்போது அடிக்கும் வெயிலில் இருந்து பாதுகாத்து ஆரோக்கியமாக இருக்கும் படி அரசு சார்பாக கேட்டுக்கொள்கிறேன்” என்று கூறினார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.