முகப்பு /புதுச்சேரி /

புதுவை வேதபுரீஸ்வரர் கோயில் தேரோட்டம்.. திரளான பக்தர்கள் வடம் பிடித்தனர்..

புதுவை வேதபுரீஸ்வரர் கோயில் தேரோட்டம்.. திரளான பக்தர்கள் வடம் பிடித்தனர்..

X
புதுவை

புதுவை வேதபுரீஸ்வரர் கோயில் தேரோட்டம்

Pondicherry Vedhapureeswarar Temple : புதுச்சேரி காந்தி வீதியில் அமைந்துள்ள ஶ்ரீதிரிபுரசுந்தரி சமேத ஸ்ரீவேதபுரீஸ்வரர் கோயிலில் தேரோட்டம் நடைபெற்றது.

  • 1-MIN READ
  • Last Updated :
  • Puducherry (Pondicherry), India

புதுச்சேரி காந்தி வீதியில் அமைந்துள்ள ஸ்ரீதிரிபுரசுந்தரி சமேத ஸ்ரீவேதபுரீஸ்வரர் கோயிலில் 37ம் ஆண்டு மகோத்சவ விழா கடந்த 26ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்றது.  தினந்தோறும் சூரிய பிரபை, பூத வாகனம், நாக வாகனம், அறுபத்து மூவர் திருவீதி உலா என பல்வேறு வாகன சேவைகளில் வேதபுரீஸ்வரர் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

இதனைத்தொடர்ந்து முக்கிய நிகழ்வான தேரோட்டம் காலை நடைபெற்றது. பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமி நாராயணன் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டு தேரினை வடம் பிடித்து துவக்கி வைத்தனர்.

புதுவை வேதபுரீஸ்வரர் கோயில் தேரோட்டம்

இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு திருத்தேரினை ஓம் நமசிவாய கோஷத்துடன் திருத்தேரோட்டதை முக்கிய வீதிகளின் வழியாக இழுத்து சென்று மீண்டும் கோவிலை வந்தடைந்தனர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

First published:

Tags: Local News, Puducherry, Religion18